பொதுவாக கழிப்பறையை குளிப்பதற்கு, துவைப்பதற்கு மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்கும் பயன்படுத்துவது இயல்பான விடயம்.
ஆனால் தற்காலத்தில் பலரும் தங்களின் கடினமான நேரங்களில் ஒரு சொர்க்கம் போல் கழிப்பறையை நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என ஆய்வுகளின் மூலம் தெரியவருகின்றது. அதற்கான காரணங்கள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆய்வுகளின் அடிப்படையில் தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு, சரியான தூக்கமின்மை, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு குடும்ப பிரச்சினைகள், அதிகரித்த விவாகரத்துகள், காதல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாககின்றார்கள்.
அதன் காரைணமாகவே கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவதை விரும்புகின்றார்கள். அன்றாட சரும பராமரிப்பு வழக்கம், கஷ்டமான சூழ்நிலைகளில் அழுவதற்கு, பிடித்தமான பாடல்களை பாடுவது போன்றவற்றிற்கு கழிப்பறை மிகவும் சரியான இடமாக இருக்கின்றது.
உண்டையில் கழிப்பறையில் இருக்கும் போது யாருடைய தொந்தரவு இன்றி அந்த இடத்தில் நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். யாருக்காகவும் நடிக்க வேண்டி ஏற்படாது என்பதால் தற்காலத்தில் பொரும்பாலானோர் கழிப்பறையை சொர்க்கம் போல் உணர்வதாக தெரியவருகின்றது.
குறிப்பாக தற்காலத்தில் இளைஞர்கள் கழிப்பறையில் அதிக நேரத்தை செலவிடுவதை பார்க்ககூடியதாக இருக்கின்றது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பங்கேற்ற 2000 நபர்களில் 43 சதவீதம் நபர்களுக்கு கழிப்பறையில் கிடைக்கும் தனிமையால் மன அமைதி கிடைத்துள்ளது.
மேலும் 13 சதவீதமானவர்கள் தங்களுடைய துணையிடம் இருந்து விலகி இருப்பதால் கழிப்பறையில் தங்களின் கவலைகளை மறந்து மகிழ்சியாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதிகமானோர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு தான் கழிப்பறையில் அதிக நேரத்தை செலவிட விரும்புகின்றார்கள் என்பது குறித்த ஆய்வில் இருந்து புலானாகிறது.