இந்த சாஸ்திரத்தின் அடிப்படையில் வாழ்வில் நடைபெறும் பல விடங்களுக்கு தொன்று தொட்டு சகுணம் பார்க்கப்படுவது வழக்கம். குறிப்பாக காகத்தை அடிப்படையாக வைத்து பார்க்கப்படும் சகுணங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்டுகின்றது.

இந்து மதத்தை பொருத்த வரையில் காகங்கள் இறந்து போன முன்னோர்களின் மறு உருவமாக பார்க்கப்படுவதுடன் நீதியின் கடவுளாகிய சனிபகவானின் வாகனம் எனவும் நம்பப்படுகின்றது. 

காகங்களுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் குறித்து முன்கூட்டியே அறிய கூடிய ஆற்றல் காணப்படுவதாக சாஸ்திங்களில் குறிப்பிடப்படுகின்றது. அப்படி காகங்கள் வெளிப்படுத்தும் சுப மற்றும் அப சகுணங்கள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். 

வீதியில் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக காகம் பறந்து வந்து உங்கள் முன் அமர்வது சில நல்ல விடயங்களை குறிப்பிடுவதாகவும் சில சமயம் ஆபத்து குறித்து உங்களை முன்னோர்கள் எச்சரிப்பதாகவும் பார்க்ப்படுகின்றது. 

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம் | What Does It Mean If We See Dead Crow On Roadகாகங்கள் வீதியில் இறப்பது மிகவும் அரிதான விடயம். அப்படி இறந்த காக்கையை சாலையில் பார்ப்பது கெட்ட சகுனமாகக் பார்க்கப்படுகின்றது. 

இது முன்னோர்கள் கோபததின் வெளிப்பாடாகவும் கருதப்படுகின்றது. இறந்த காகம் ஒருவரின் மரணத்தை முன்கூட்டியே அறிப்பதாகவும் நம்பப்படுகின்றது. 

எனவே இறந்த காகத்தை வீதியில் பார்த்தால் உடனடியாக முன்னோர்களுக்கு முறையான பரிகாரங்களை செய்ய வேண்டியது அவசியம்.

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம் | What Does It Mean If We See Dead Crow On Roadமேலும் சாலையில் இறந்த காக்கையைப் பார்த்தால், எதிர்காலத்தில் வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கப்போகின்றீர்கள் என்று அர்த்தம். 

அது மட்டுமன்றி இறந்த காகத்தை காண்கின்றீர்கள் என்றால் சனி பகவான் உங்கள் மீது கோபத்தில் இருப்பதையும் குறிக்கின்றது.  சாலையில் செத்த காக்கையைப் பார்த்தால், சனி தோஷம் இருக்கின்றதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியம். 

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம் | What Does It Mean If We See Dead Crow On Roadஇப்படி இறந்த காகத்தை பார்க்கும் பட்சத்தில்  உடனடியாக சனி பகவான் கோயிலுக்கு சென்று அதற்கான பரிகாரத்தை செய்ய வேண்டும். இது சனி பகவானின் கோபத்தை மட்டுமல்லாது முன்னோர்களின் கோபத்தையும் குறைக்கும்.