எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும்.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட திகதியில் பிறந்தவர்கள் செல்வம் மற்றும் பணத்தின் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். அது எந்த திகதி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிஷ்டத்திற்கும் பணத்திற்கும் சொந்தக்காரர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் உங்க திகதி என்ன? | Which Number Is Lucky As Per Date Of Birth Tamilஎண் கணிதத்தின்படி, மூல எண் 3 உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் இவர்களின் அதிபதி குருவாவார். 3 எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் சுயமரியாதையை எதிபார்ப்பவர்கள். 

இந்த காரணத்தினால் யாரிடமும் தலைவணங்க மாட்டார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மிகவும் தைரியம்வாய்ந்தவர்கள். ஒரு விஷயத்தில் இவர்கள் என்ன நினைத்தாலும் அதைசாதிக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அதிஷ்டத்திற்கும் பணத்திற்கும் சொந்தக்காரர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் உங்க திகதி என்ன? | Which Number Is Lucky As Per Date Of Birth Tamilஇவர்களின் நேர்மறை பண்புகளாக இருப்பது இயற்கையோடு இயைந்திருப்பவராகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், வாழ்க்கையில் திருப்தியுடனும் வாழ்வார்கள். சமுதாயத்தில் எல்லா விஷயத்திலும் திறமைசாலிகளாக இருப்பார்கள். 

இதை பார்த்து மற்றவர்கள் கற்றுகொள்ளும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். உங்களிடம் சில பண்புகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் அதை தள்ளிப்போடாமல் முடிப்பது முக்கியம்.

சவால்களை சரியான முறையில் சமாளிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உரிய முறையில் கையாளுவது மிகவும் நல்லது. இவர்கள் கொஞ்சம் சுயமரியாதை உடையவர்கள் என்பதால் வியாழனின் செல்வாக்கு இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்குவதால் நதி நெருக்கடியில் எப்போதும் சிக்கி கொள்ள மாட்டார்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி அடைவார்கள். உதவும் மனப்பான்மை கொண்ட இந்த மக்கள் எப்போதும் உதவ தயாராக இருப்பார்கள்.

இதன் காரணத்தால் இவர்கள் செல்வம் மேம்படும். இந்த இலக்கதில் பிறந்தவர்கள் இருமுறை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்றும் எண் கணிதம் கூறுகிறது.

அதிஷ்டத்திற்கும் பணத்திற்கும் சொந்தக்காரர்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் உங்க திகதி என்ன? | Which Number Is Lucky As Per Date Of Birth Tamil