தமிழ் பெண்கள் திருமணமானவர்கள் என்றால் பொதுவாக தாலி கயிறு அணிந்திருப்பது வழக்கம். இது சில நேரங்களில் நாம் அசதியாக இருக்கும் போது நம்மை விட்டு கழன்று விழுந்து விடும்.
இதை சிலர் பதறிப்போய் அபசகுணமாக பார்க்கின்றனர். தாலியில் பல வகை காணப்படுகின்றது. தாலி கட்டுவது ஒரு தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும்.
இதை அனைவரும் மஞ்சள் கயிற்றில் தான் கட்டிகொள்வார்கள். இந்த கயிறு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. ஆனால் சிலர் பல சடங்குத்தேவைக்காக மாற்றிக்கொள்வார்கள்.
இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது அனைவரும் பயப்படும் தாலிக்யிறு கழுத்தில் இருந்து உறங்கும் நிலையில் கழன்று விழுந்தால் அது அபசகுணத்தை குறிக்கிறதா? என்பதுதான்.
தாலி பார்வதிதேவியின் அம்சமாகும். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகின்றபோது தாலி என்பது அந்த திருமண வாழ்க்கையின் ஆதாரமாக அமைகிறது.
புனிதமான கணவன் மனைவி பந்தத்தை தாலியே உறுதிப்படுத்துகிறது. திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளைக் கொண்டே மாங்கல்யம் அணிவிக்கப்படுகிறது.
இந்த ஒன்பது இழைகளும், வாழ்க்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிப்பதாக நம்பப்படுகின்றது. கணவன் மனைவியுடன் இல்லாத நேரத்தில் பெரியவர்கள் ஆசீர்வதித்து அந்த தாலியில் குங்குமம் வைத்தால் கணவனுக்கு நல்லது நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.
இவ்வளவு நம்பிக்கை நிறைந்த ஒரு பொருளை நாம் தொலைத்தால் நமது மனம் எப்பாடுபடும் என்பது நன்கு அறிந்ததே. அந்த வகையில் ஜோதிடர் கூறும் போது நாம் 'நன்கு உறங்கும் நிலையில் தாலி கயிறு தொலைந்தால் நன்மைதான் என கூறுகிறார்.
நாம் ஒரு சகுனத்தை கணிப்பிடும் போது நம்மை மீறிய விஷயங்களை தான் நாம் நம்ப வேண்டும். இப்போது உதாரணத்திற்கு குறிப்பிட வேண்டும். என்றால் நாம் வெளியே செல்லும் போது நமது மேலே வானத்தில் கருடன் பறந்தால் நாம் செல்லும் காரியம் நிறைவேறும்.
இது நம்மை மீறிய விஷயம். இதுபோன்ற விஷயங்களை நாம் நம்பலாம் ஆனால் எதுவும் இல்லாமல் சாதாரணமாக நடக்கும் விஷயங்களை கண்டு பயப்பட கூடாது. இந்த விஷயங்கள் நடந்தால் தாலி பலன் அதிகமாகுமே தவிர அதற்கு பங்கம் வராது.
எனவே இதுபோன்ற விஷயங்களை கண்டு அஞ்சாமல் அதற்கு பதிலாக புது கயிறு மாற்றி கொள்வது நல்லது.