பொதுவாக உலகில் பலராலும் விரும்பி வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக நாய் காணப்படுகின்றது. நாய்கள் மிகவும் நன்றியுள்ள மற்றும் விசுவாச குணம் கொண்ட ஒரே மிருகமாக பார்க்கப்படுகின்றது. 

வளர்ப்பு நாய்கள் தனது உரிமையாளரிடம் மிகவும் பாசமாகவும் பணிவாகவும் நடந்துக்கொள்கின்றது. மேலும் வீட்டில் வளர்க்கப்டும் நாய்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சரியாக நேரத்திற்கு ஊசிகள் போடப்படுவதனால் அவை தற்தமயம் மற்றவர்களை கடித்தாலும் பெரிய ஆபத்து ஏற்படுவது இல்லை.

நாய் உங்களை கடிக்க வரும் போது எப்படி தப்பிப்பது? இதை மட்டும் பண்ணாதீங்க | How To Protect Yourself From Street Dogs

ஆனால் வீதிகளில் உலாவும் தெரு நாய்கள் அவ்வாறு பராமரிக்கப்படுவது கிடையாது. இதனால் தெரு நாய்களுக்கு திடீர் என வெறிப்பிடிக்க கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் இந்த நாய்கள் கடிப்பது மிகவும் ஆபத்தானது. 

எனவே தற்சமயம் தெரு நாய்கள் உங்களை துரத்தினால் எவ்வாறு அவற்றிடமிருந்து சாமர்த்தியமாக தப்பிப்பது எனவும் நாய் துரத்த முற்பட்டால் செய்ய கூடாத விடயங்கள் குறித்தும்  இந்த பதிவில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம். 

நாய் உங்களை கடிக்க வரும் போது எப்படி தப்பிப்பது? இதை மட்டும் பண்ணாதீங்க | How To Protect Yourself From Street Dogs

அனைவருக்குமே நாய் துரத்த முற்பட்டால் உடனே இனம்புரியாத பயம் ஏற்படுவது இயல்புதான் ஆனாால் இந்த பயத்தை வெளிப்படுத்தினால் நாய் உங்களை கடிப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்டுகின்றது. 

குறிப்பா தெரு நாய்கள் உங்களை பார்த்து குரைத்தால் தவறியும் ஓட ஆரம்பித்துவிட கூடாது. அப்படி ஓடினால் நாய்கள் உங்களை வெளி நபர்கள் என்று நினைத்து துரத்திவர ஆரம்பித்துவிடும். 

நாய் உங்களை கடிக்க வரும் போது எப்படி தப்பிப்பது? இதை மட்டும் பண்ணாதீங்க | How To Protect Yourself From Street Dogs

நாய்கள் உங்களை கடிக்க வந்தாலும் பயத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இயலுமான வரையில் கத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது நாயின் அட்ரினலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.எனவே நாய் பயத்தில் தன்னை காப்பாற்றிக்கொள்ள உங்களை கடிக்க நேரிடும். 

நாய் கடிக்க வந்தால் கத்தாமல் தரையில் அமைதியாக அமர்ந்திருப்பது சிறந்த முறையாகும். மேலும், நாய்களுடன் நேரடி கண் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.

நாய் உங்களை கடிக்க வரும் போது எப்படி தப்பிப்பது? இதை மட்டும் பண்ணாதீங்க | How To Protect Yourself From Street Dogs

நாய்களை திரும்பி பார்க்காமல், நீங்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும். வயிறு மற்றும் கழுத்து போன்ற உங்கள் முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க ஒரு பை அல்லது ஒரு பொருளைப் பயன்படுத்துவது அவசியம்.எந்த மிருகம் நம்மை துரத்தினாலும் அதனுடன் நேரடியாக நாம் கண்ணோடு கண் பார்ப்பதை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.