ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு முதல் திருமணம் முடிந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
சில சமயங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டால் விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்வார்கள்.
அந்த வகையில், இரண்டாவது திருமணம் செய்ய போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இரண்டாவது திருமணத்திற்காக விவாகரத்து செய்யும் ராசிகள்

1. ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் திருமணம் என வரும் போது துணையிடம் இருக்கும் குறைகளை தான் அதிகமாக தேடுவீர்கள். ஒரு சில சமயங்களில் குறைகள் அதிகமாக இருந்தால் அந்த உறவை முடித்து கொண்டு மறுமணம் செய்து கொள்வீர்கள்.
2. துலாம் ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை பெற விரும்புவார்கள். இவை முதல் திருமணத்தில் கிடைக்கவில்லையென்றால் விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்வார்கள்.
3. விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் முதல் திருமண துணையிடம் நிறைய எதிர்பார்ப்புக்களை வைத்து கொள்வார்கள். அது முதல் துணையிடம் கிடைக்கவில்லையென்றால் தயவு பாராமல் விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணத்திற்கு துணை தேடுவார்கள்.

4. தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சுதந்திரமானவராக இருப்பார்கள். திருமணத்திற்கு பின்னரும் அதனையே எதிர்பார்ப்பார்கள். இது தடுக்கப்படும் பட்சத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்கள். அந்த துணையும் சுதந்திர வாழ்க்கைக்குள் தலையீ்டாவிட்டால் நிலைக்கும்.
5. கும்ப ராசிக்காரர்கள் முதல் திருமணத்துணையிடம் அதிகமான விடயங்கள் எதிர்ப்பார்ப்பார்கள். அது கிடைக்காத பட்சத்தில் விவாகரத்து பெற்று விடுவார்கள். அல்லது துணையிடம் இருந்து பிரிந்து திருமணம் செய்யாமல் வாழ்வார்கள்.
