ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் இயல்புகள் மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் கணவர்களாக வாய்த்தால் இந்த பெண்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழல் ஏற்படுமாம்.காரணம் இவர்கள் மிகவும் சோம்போறித்தனம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இப்படி தங்களின் வேலைகளை கூட சரிவர செய்துக்கொள்ளாத அளவுக்கு சோம்பேறித்தனம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே சோம்பேறித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் திருமணத்திற்கு முன்னர் தாயிடம் உதவி கேட்டு வாழ்வதை போல் திருமணத்தின் பின்னர் தங்களின் வேலைகள் அனைத்தையும் மனைவியை சுமக்க வைத்துவிடுவார்கள்.
இந்த ராசி கணவன் மார்கள் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒருபோதும் உதவி செய்ய வேண்டும் என நினைக்கவே மாட்டார்கள். இந்த ராசி ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் சற்று கடின உழைப்பாளிகளாக இருக்க வேண்டிய தேவை ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் தலைமைத்துவ பண்புகளை அதிகம் கொண்டிருப்பினும் இவர்கள் மற்றவர்களை வேலை வாங்குவதில் தான் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் எவ்வளவு வேலைகளை செய்தாலும் அது பற்றி துளியும் இவர்களுக்கு கவலையோ அக்கறையோ இருப்பது கிடையாது.
சிம்ம ராசி ஆண்களிடம் ஒரு வேலையை செய்யச்சொன்னால் அவர்கள் அதை மற்றவர்களுக்கு பொறுப்பு கொடுத்துவிட்டு ஓய்வெடுக்க முயற்ச்சி செய்வார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் பேசுகையில் மற்றவர்கள் மிகவும் உட்சாகமாக உணர்வார்கள் ஆனால் செயல் என்று வரும் போது அவர்களை விட சோம்பேறிகள் வேறு யாரும் இல்லை என்கின்ற அளவுக்கு நடந்துக்கொள்வார்கள்.
தனுசு ராசி ஆண்கள் கணவனாக பொறுப்புகளை சுமக்க பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். இவர்களின் அதிகபடியான சுதந்திர உணர்வு அவர்களை பொறுப்புகளை சுமக்க அனுமதிக்காது. இதனால் அவர்கள் குடும்ப வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள்.