பொதுவாகவே இரவிலும் சரி பகலிலும் சரி தூங்கும் போது கனவு வருவது ஒரு இயல்பான விடயம் என்றாலும், சில நேரங்களில் கனவுகள் அச்சமூட்டுவதாக அமையும்.

அது போல் சில சமயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கனவுகள் ஏற்படலாம். ஆனால் கனவு சாஸ்திரங்களின்படி கனவுகள் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே எச்சரிக்கக்கூடிய ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகின்றது.

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை! | Is It Good To See Fish In Dreams

கனவில் தோன்றும் விடயங்கள் நிஜத்தில் நடக்கப்போவதாக அர்த்தம் கிடையாது. அந்த கனவுகளுக்கு நிகரான பலன்கள் மாத்திரமே நடக்கும். 

அந்தவகையில், கனவில் மீன் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? அது என்ன மாதிரியான அறிகுறிகளைத் குறிப்பிடுகின்றது.மீனை எவ்வாறு காண்பது அதிர்ஷ்ட பலக்களை கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை! | Is It Good To See Fish In Dreamsஜோதிட சாஸ்திரம் மற்றும் கனவு அறிவியலின் பிரகாரம் நாம் காணும் அனைத்து கனவுகளுக்குமான எதிர்வினைகள் நிகழும்.

கனவில் சில உயிரினங்களைக் பார்த்தால் அதற்கும் சில நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் இருப்பதாக கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை! | Is It Good To See Fish In Dreams

அந்த வகையில் கனவில் ஒரு மீனை பார்த்தால் அந்த நபரின் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சிகரமாாக இருக்கப்போவதை முன்கூட்டியே குறிப்பிடுவதாக அமைகின்றது.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மீன் கனவுகள் வந்தால் கர்ப்பத்தில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கின்றது என அர்த்தமாம். இது உங்களுக்கு நல்ல முறையில் பிரசவம் இடம்பெறும் என்பதன் அறிகுறியாக இருக்கின்றது. 

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை! | Is It Good To See Fish In Dreams

நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் மீன் தொட்டியையும் அதில் உள்ள மீனையும் கனவில் காண்கின்றீர்கள் என்றால் இது உங்களின் பொறுப்புகளை சரியவர நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் இருக்கின்றீர்கள் என அர்த்தம்.

அது மட்டுமன்றி எதிர்காலத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கப்போவதை எச்சரிப்பதாகவும் இது அமைகின்றது.

 தங்க மீன்கள் கனவில் வருகின்றது என்றால், நீங்கள் தற்போது வாழும் வாழ்வில் உங்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்றவில்லை என அர்த்தம். 

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை! | Is It Good To See Fish In Dreams

உங்கள் கனவில் ஜோடியாக உள்ள மீன்களைப் பார்க்கின்றீர்கள் என்றால், அது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு கனவு வந்தால் உங்கள் காதல் வாழ்க்கையில் அல்லது திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கப்போவதாக அர்த்தம்.

கனவில் மீனை பிடிப்பது போல கண்டால், அது உறவு தொடர்பான முடிவைக் குறிக்கலாம் அல்லது நீங்கள் வாழ்வில் தோல்வியை சந்திக்கப்போகின்றீர்கள் என்று அர்த்தம். ஆனால் விரைவில் நீங்கள் அந்த பணியில் பேராடி வெற்றியடைவீர்கள்.

மீனை கனவில் பார்த்தால் அதிர்ஷ்டமா? இப்படி கண்டால் ஜாக்கிரதை! | Is It Good To See Fish In Dreams

இறந்த மீனை கனவில் காண்பது அசுப அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. அது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் மோசமான சம்பவங்களை முன்கூட்டியே அறிவிப்பதாக அமைகின்றது. அவ்வாறு கனவு கண்டால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.