பொதுவாகவே உலகில் எல்லா நாடுகளிலும் லிப்ட்டிற்குள் கண்ணாடி வைக்கப்படும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. 

பெரும்பாலான  மக்கள் தங்கள் தோற்றத்தை சரிபார்த்துக் கொள்வதற்காகவே லிப்ட்டிற்குள் கண்ணாடி வைக்கப்பட்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் அவை பல முக்கிய நோக்கங்களுக்காகவே வைக்கப்படுகின்றது.

அனைத்து லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்? வியப்பூட்டும் அறிவியல் காரணம் | Why Do All Lift Have Mirrors Inside

கட்டடம் அல்லது மாலின் லிப்ட்டுக்குள் நீங்கள் நுழையும்போது, ​​உள்ளே கண்ணாடிகள் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும் அப்படி கண்ணாடிகள் வைக்கப்படுவதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் மற்றும் முக்கியத்துவம் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

அனைத்து லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்? வியப்பூட்டும் அறிவியல் காரணம் | Why Do All Lift Have Mirrors Inside

சிலருக்கு லிஃப்ட் போன்ற மூடிய அல்லது வரையறுக்கப்பட்ட இடங்களில் கிளாஸ்ட்ரோஃபோபியா மற்றும் பதற்றம், பயம் போன்ற உளவியல் பிரச்சினைகள் ஏற்படும். இதனை தடுப்பதற்காகவே லிப்டிற்குள் கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன.

அனைத்து லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்? வியப்பூட்டும் அறிவியல் காரணம் | Why Do All Lift Have Mirrors Inside

இவ்வாறு கண்ணாடிகள் வைக்கப்படுவதால் லிப்டில்  அதிக இடம் இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, இடத்தை பெரிதாக காட்டுகின்றது. அதனால் உளவியல் ரீதியில் பிரச்சினை உள்ளவர்களும் குறுகிய இடத்தில் பதற்றத்தை அனுபவிப்பவர்களும் நிம்மதியாக பயணிக்க வசதியாக இருக்கும். 

அது மட்டுமன்றி லிப்டில் கண்ணாடிகள் இருப்பதால், அதனுள் பயணிப்பவர்கள் சுற்றுப்புறங்களை தெளிவாக பார்க்க முடிகிறது. அதனால் மற்றவர்கள் நம்மை தவறாக அனுகாமல் இருக்கவும்  அச்சுறுத்தல்களைப் பற்றி உடனடியாக அறியவும் இந்த கண்ணாடிகள்  பெரிதும் துணைப்புரியும். 

அனைத்து லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்? வியப்பூட்டும் அறிவியல் காரணம் | Why Do All Lift Have Mirrors Inside

சக்கர நாற்காலிகளை பயன்படுத்துபவர்கள் அல்லது நடப்பதில் சிக்கல்கள் உள்ளவர்கள் போன்ற மாற்று திறனாளிகளுக்கு லிப்டில் இருக்கும் கண்ணாடிகள் எளிதாக தங்களுக்கு பின்னால் நடப்பதை அறியவும் உதவுவதுடன் இவர்கள் லிப்ட் பாவிப்பதை இந்த கண்ணாடி எளிதாக்குகின்றது. 

குறிப்பாக லிஃப்ட்டில் ஏறி, தாங்கள் செல்ல வேண்டிய மாடிக்கு சென்றடையும் வரை காத்திருக்கும்போது, ஏற்படும் பொறுமையின்மை பிரச்சினைக்கு இந்த கண்ணாடி தீர்வாக இருக்கின்றது.

அனைத்து லிப்ட்களிலும் கண்ணாடி வைப்பது ஏன்? வியப்பூட்டும் அறிவியல் காரணம் | Why Do All Lift Have Mirrors Inside

லிஃப்ட்டில் உள்ள கண்ணாடிகள் அலங்காரத்திற்காகவோ அல்லது மக்கள் தங்கள் தோற்றத்தை சரிபார்க்க ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவோ வைக்கப்படவில்லை. என்றாலும் இது அதற்கும் பயன்படுகின்றது. 

குறிப்பாக நேர்முக தேர்வுகள், மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு செல்பவர்களுக்கு சீக்கிரமாக தங்களின் தோற்றத்தை சரிபார்த்து கொள்ளவும் இது உதவுகின்றது.