பொவதுவாகவே தீபாவளி பண்டிகைக்கு அனைவரினது வீடுகளிலும் அதிகளவில் இனிப்பு பண்டங்களை செய்வது வழக்கம்.

ஆனால் பண்டிகை நாட்களில் நாம் செய்யும் இனிப்புக்களை உறவினர்கள் மற்றும் அயலர்களுக்கு கொடுப்பது போன்று அவர்களும் கொடுப்பார்கள். இதனால் நாம் வீடுகளில் அதிகமாக செய்யும் இனிப்புகள் அப்பயே இருக்கும்.

Diwali-special: அசத்தல் சுவையில் ரவா லட்டு... இப்படி செய்ங்க ஒரு வாரமானாலும் கெட்டுப் போகாது | Diwali Special Rava Laddu Recipe In Tamil

இவை இரண்டு மூன்று நாட்களில் பழுதாகிவிடும். இப்படி ஆகாமல் ஒரு வாரத்துக்கு மேலும் கெட்டுப்போகாமல் வைத்திருக்கும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு ரவா லட்டு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

Diwali-special: அசத்தல் சுவையில் ரவா லட்டு... இப்படி செய்ங்க ஒரு வாரமானாலும் கெட்டுப் போகாது | Diwali Special Rava Laddu Recipe In Tamil

தேவையான பொருட்கள்

நெய் - 4 மேசைக்கரண்டி 

முந்திரி - தேவையான அளவு 

உலர் திராட்சை - தேவையான அளவு 

ரவை - 1/4 கிலோஅல்லது 2 கப் 

துருவிய தேங்காய் - 1 கப்

சர்க்கரை - 1 3/4 கப் 

ஏலக்காய் - 3 

காய்ச்சிய கெட்டிப் பால் - 1/4 கப்

Diwali-special: அசத்தல் சுவையில் ரவா லட்டு... இப்படி செய்ங்க ஒரு வாரமானாலும் கெட்டுப் போகாது | Diwali Special Rava Laddu Recipe In Tamil

செய்முறை

முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், தேவையான அளவு முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்து எடுத்து அதையும் தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். 

Diwali-special: அசத்தல் சுவையில் ரவா லட்டு... இப்படி செய்ங்க ஒரு வாரமானாலும் கெட்டுப் போகாது | Diwali Special Rava Laddu Recipe In Tamil

அதனையடுத்து துருவிய தேங்காயை போட்டு நன்றாக வறுத்து அததையும் வறுத்த ரவையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து, அதையும் ரவையுடன் சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

Diwali-special: அசத்தல் சுவையில் ரவா லட்டு... இப்படி செய்ங்க ஒரு வாரமானாலும் கெட்டுப் போகாது | Diwali Special Rava Laddu Recipe In Tamil

பின்னர் அதனுடன் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கைகளால் நன்றாக கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி குளிர வைத்த பாலை ஊற்றி கைகளால் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

Diwali-special: அசத்தல் சுவையில் ரவா லட்டு... இப்படி செய்ங்க ஒரு வாரமானாலும் கெட்டுப் போகாது | Diwali Special Rava Laddu Recipe In Tamilஇறுதியில் கைகளில் நெய்யைத் தடவி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருட்டினால்,அவ்வளவு தான் அசத்தல் சுலையில் ரவா லட்டு தயார். அதனை ஒரு வாரம் வரையில் வைத்திருந்து சாப்பிடலாம்.