பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தூக்கம் இன்றியமையாதது. அப்படி நாம் தூங்கும் போது கனவில் பல நல்ல விடயங்களையும் தீய விடயங்களையும் சந்திக்க நேரிடும்.
இதற்கு என்ன அர்த்தம் இப்படி நடக்கப்போகின்றதா என பெரும்பாலானவர்கள் குழம்பிப்போகக்கூடும். ஆனால் கனவில் நாம் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கப்போகின்றது என்று அர்த்தம் கிடையாது.
அதற்கான பலன்களே கிடைக்கும் என கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது. இந்து மதத்தில் பிரபல்யம் வாய்ந்த சொப்பன சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில உயிரினங்களை கனவில் காணப்பது மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.
அப்படி கனவில் தோன்றி ராஜயோகத்தை கொடுக்கும் வெள்ளை நிற உயிரினங்கள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை ஆந்தை
கனவு சாஸ்திரதின் பிரகாரம் கனவில் வெள்ளை நிற ஆந்தையை கண்டால் வாழ்வில் எதிர்பாரத அளவுக்கு மங்களகரமான விடயங்கள் நடக்கும் என்று நம்பப்படுகின்றது.
இந்து மதத்தில் வெள்ளை நிற ஆந்தை லட்சுமி தேவியின் மறு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே வெள்ளை ஆந்தை கனவில் வந்தால் நிதி ரீதியில் பாரிய முன்னேற்றம் ஏற்படும்.
எதிர்பாத வகையில் வருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் திறக்கும். வாழ்வில் நீண்ட நாட்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த விடயம் நடக்கும்.
வெள்ளை குதிரை
கனவில் வெள்ளை நிறக் குதிரையைப் கண்டால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கப்போகின்றது என்று அர்த்தம்.
தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படும். இதுவரையில் வாழ்வில் இருந்து வந்த பணகஷ்டத்துக்கு மொத்தமாக தீர்வு கிடைக்கும்.
வெள்ளை குதிரையை கனவில் பார்ப்பது, மிகவும் மங்களகரமாக விடயமாக பார்க்கப்படுகின்றது. எதிர்காலத்தில் பெரிய மகிழ்ச்சி காத்திருப்பதையே இது உணர்த்துகின்றது.
வெள்ளை யானை
கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் வெள்ளை யானை என்பது மரியாதை மற்றும் நம்பிக்கையின் சின்னமாகவே பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு கனவு வந்தால், சமூகத்தில் மரியாதை மற்றும் புகழ் அதிகரிப்பதுடன் பண வரவு அதிகரிக்குடம் என்பது ஐதீகம்.
கனவில் வெள்ளை யானையை பார்ப்பது என்பது ராஜயோகத்தின் நிச்சயம் கொடுக்கும் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.