முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர். 

இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதியின் பிரகாரம் சாமானிய மனிதர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகின்றது.

அந்தவகையில் சாணக்கியரின் அறிவுரையின் அடிப்படையில் வாழ்வில் அமைதியாகவும் மகிழ்சியாகவும் வாழ வேண்டும் என்றால், தவிர்த்துக்கொள்ள வேண்டிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

சாணக்கிய நீதியின் அடிப்படையில் சிறிய விடயங்களுக்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கவே முடியாது என்கின்றார் சாணக்கியர்.

காரணம் அவர்கள் சிறிய கவலையை பற்றி நினைத்து நினைத்தே அவர்களை சுற்றி நடக்கும் பல நல்ல விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடுகின்றார்கள். 

இந்த குணங்கள் கொண்டவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியே இருக்காது... எச்சரிக்கும் சாணக்கியர் | Chanakya These Types Of People Should Not Be Happyவாழ்வில் இடம் பெறும் துக்கம் நிறைந்த நிகழ்வுகளில் இருந்து தங்களை மீண்டுக்கொள்ள முடியாதவர்களால் வாழ்க்கை முழுவதும் சந்தோஷத்தை அனுபவிக்கவே முடியாது. 

வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் இருந்தாலும் அவர்கள் துக்கத்துக்கு கொடுக்கும் முக்கியததுவம் வாழ்வில் இருக்கும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் மறைத்துவிடும் 

இந்த குணங்கள் கொண்டவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியே இருக்காது... எச்சரிக்கும் சாணக்கியர் | Chanakya These Types Of People Should Not Be Happyஅளவுக்கு அதிகமாக குழந்தைகள் பற்றியோ இல்லது ஒரு நபர் பற்றியோ கவலைப்படுபவர்கள் வாழ்வில் ஒருபோதும் மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார். 

தீய குணம் அல்லது ஏமாற்றும் குணம் கொண்ட பெண்களால் அவர்களின் சந்தோஷம் பாதிக்கப்படுவது மற்றுமன்றி குடும்பத்தின் மகிழ்ச்சியும் வலுவாக பாதிக்கப்படும். இப்படிப்பட்டவர்கள் வாழ்வில் மகிழ்சி என்பதே இல்லாமல் போய்விடும்.

மற்றவர்களின் வாழ்க்கையுடன் தங்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கும் குணம் கொண்டவர்களால் ஒருபோதும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவே முடியாது. இத்தகைய குணம் கொண்டவர்கள் வாழ்வில் துன்பத்திலேயே தான் இருப்பார்கள்.