ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் விசேட குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் திருமண வாழ்க்கை மீது அனைவருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருப்பது இயல்பான விடயம் தான்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்களுக்கு திருமண வாழ்க்கை மீதான ஆசை மிகவும் விரைவாகவே ஏற்பட்டு விடுமாம். இவர்களுக்கு திருமண உறவில் இருப்பது ஒரு கனவான இருக்கும்
அப்படி திருமண வாழ்க்கையின் மீது அதீத ஈடுபாடு மற்றும் ஆர்வம் கொண்ட ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே சாகச உணர்வுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்றும் பெரிய பொறுப்புக்களை சுமக்க வேண்டும் என்றும் இவர்களின் ஆசையை தூண்டுவதாக அமையும்.
இவர்கள் தங்களுக்கான துணையை கண்டறிந்து விட்டால் எந்த காரணத்துக்காகவும் தாமத்திக்காமல் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரகனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களுக்கு காதல் மற்றும் திருமண விடயங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும்.
உண்மைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற ரிஷப ராசியினர் திருமண பந்தத்துக்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் கொடுப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த ஆண்களுக்கு மிகவும் விரைவாகவே திருமண வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
கடகம்
கடக ராசியில் பிறந்த ஆண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். இவர்களுக்கு இயல்பாகவே கருணை அதிகம் இருக்கும்.
இவர்கள் காதல் விடயத்தில் துணையை மிகவும் அதிகம் நேசிப்பவர்களாக இருப்பார்கள். துணையை எந்த சூழ்நிலையிலும் பிரிய முடியாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.
இதனால் விரைவில் திருமணம் செய்துக்கொள்வதில் இவர்களுகு ஆர்வம் அதிகம் இருக்கும். மேலும் இவர்களுக்கு இயல்பாகவே திருமண வாழ்க்கை மீது அதிக ஈர்ப்பு காணப்படும்.