ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் குணங்களுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நீதியின் கடவுளாக கருதப்படும் சனிபகவானின் ஆசி முழுமையாக கிடைக்கும். சனியின் கருணை பார்வை இருந்தால் ஆண்டியும் அரசனாகலாம் அவரின் கோப பார்கையில் சிக்கினால் அரசனும் ஆண்டி தான்.
அப்படி சனியின் முழுமையான ஆசியால் வாழ்க்கை முழுவதும் ஆடம்பரத்தையும் செல்வ செழிப்பையும் அனுபவிக்கும் அதிஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் அதிபதியாக இல்லாத போதும் இந்த ராயினருக்கு இயல்பாகவே சனிபவானின் ஆசீர்வாரதம் எப்போதும் இருக்கும்.
இவர்கள் வாழ்வில் தொழில் முன்னேற்றம் மற்றும் பணவரவு எப்போதும் சீராக இருக்கும். இவர்கள் வாழ்வில் ஒருபோதும் நிதி பற்றாக்குறையை சந்திப்பதே கிடையாது.
இந்த ராசியினர் உலகத்து இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து வாழ்க்கை முழுவதும் ஆடம்பரமாக வாழ்வார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியாகவே சனிபகவான் இருப்பதால் இவர்கள் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
இந்த ராசியினர் நேரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.இவர்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
உழைப்பால் உயர வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் இவர்களுக்கு, விரும்பாத போதும் கூட அதிஷ்டம் கை கொடுக்கும். எந்த வேலையை எடுத்தாலும், அதனை முழுமையாக முடித்த பின்னரே ஓய்வெடுப்பார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கும் சனிபகவான் தான் அதிபதியாக இருக்கின்றார். சனியின் ஆசி எப்போதும் இவர்களுக்கு நிதி உயர்வை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
இவர்கள் பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதால் பணம் சம்பாதிப்பதில் இந்த ராவியினர் வல்லவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் பார்வையில் சோம்பேறிகளாக தெரிந்தாலும் புத்திசாலித்னமாக விரைவில் முன்னேறுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பணம் குவிந்துக்கொண்டே இருக்கும்.