நாம் நமக்கே தெரியாமல் ஏதோ ஒரு ராசியில் வந்து இந்த பூமியில் பிறக்கின்றோம். இது ஜோதிடத்தின் மூலம் நம்பப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு கடவுளின் குணம் கிடைத்துள்ளது. இவர்கள் வாழும் வாழ்க்கையில் அந்த கடவுளின் குணத்துடன் வாழ்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் | முருகனை போல துணிச்சலும் தைரியமும் நிறைந்த நபர்கள் தான் மேஷ நபர்கள். எந்த தடையினும் கடந்து வெற்றி பெறுவார்கள். |
ரிஷபம் | லட்சுமி தேவி போல் பொறுமையும் கடின உழைப்புடனும் வாழ்பவர்கள் தான் ரிஷப நபர்கள். முயற்ச்சி உங்களுக்கு நிலையான செல்வத்தை ஏற்படுத்தும். உழைப்பின் மூலம் பலம் சேரும். |
மிதுனம் | நாராயணன் போல் புத்திசாலித்தனமும் வியூகத்திறனும் கொண்டவர்கள் தான் மிதுன ராசிக்காரர்கள். எந்த சூழ்நிலையிலும் யோசனை மூலம் வெற்றி பெறுவீர்கள். அறிவே உங்களுக்கு சக்தி. |
கடகம் | ராமர் போல் நேர்மை செழிப்பு குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் தான் கடக நபர்கள். அன்பிலும் பெருமையிலும் சாமர்த்தியம் கொண்டவர்கள் கடக நபர்கள். உண்மை மற்றும் தர்மம் தான் உங்கள் சக்தி. |
சிம்மம் | சூரிய நாராயணன் போல் பிரசன்ன ஆளுமையும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்கள் தான் சிம்ம நபர்கள். எந்த இடத்திலும் தலைமைத்துவம் வைத்து முன்னேறுவார்கள். |
கன்னி | கிருஷ்ணன் போல் புத்திசாலித்தனமும் கலைஞானமும் யோசனை திறன் அதிகம் கொண்டவராகவும் இருப்பர்கள். எதை செய்தாலும் அன்புடனும் சரியான திட்டத்துடனும் செய்பவர்கள். தெளிவு மற்றும் சிந்தனை தான் உங்கள் அடையாளம். |
துலாம் | அஷ்ட லட்சுமி போல் சமத்துவம் அழகு செழிப்பில் வாழ்வார்கள். அவர்களின் மகிழ்ச்சியையும் அமைதியையும் மக்களுக்கு வழங்கி தருவார்கள். சமநிலை தான் உங்களுடைய வெற்றி. |
விருச்சிகம் | ஆறுமுகம் முருகனை போல் பயமற்ற சக்தியை கொண்டவர்கள். கடினமான சூழ்நிலையிலும் உறுதியுடன் செயல்படுவார்கள். வீரம் தான் உங்கள் அடையாளம். |
தனுசு | பரசு ராமர் போல் தீர்மானம் சிந்தனை கடமை உணர்வு கொண்டவர்கள் தான் தனுசு நபர்கள். எந்த சவாலாக இருந்தாலும் எதிர்கொண்டு வெற்றியை நோக்கி செல்வார்கள். உறுதி தான் உங்கள் அடையாளம். பரசுராமரை போல் தர்மத்திற்காக போராடுங்கள் |
மகரம் | மீனாட்ச்சி அம்மன் போல் செழிப்பு நுட்ப அறிவு தீர்க்க தரிசனம் கொண்டவர்கள் தான் மகர நபர்கள். கடின உழைப்பால் உயர்ந்து வருவீர்கள். வலிமை தான் உங்கள் அடையாளம். |
கும்பம் | ஹனுமான் போல் நம்பிக்கையும் ஆற்றலும் கொண்டவர்கள். எந்த தடையிலும் சமாளிக்கும் மனப்பக்குவம் இருக்கும். நம்பிக்கை தான் உங்கள் சக்தி. |
மீனம் | மீனம் பிரம்ம தேவர் போல் கற்பனை திறன் புதிசாலித்தனம் அறிவு நிறைந்தவர்கள் தான் மீன நபர்கள். புதிய விடயங்களை உருவாக்கும் திறமை கொண்டவர்கள். பிரம்ம தேவர் போல் சிந்தித்து படையுங்கள். |