கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். இதற்கு நாம் எப்படி நடது சருமத்தை மூடி சென்றாலும் அதன் தாக்கத்தால் சருமம் பெலிவை இழந்து கருமையடைவது உறுதி.

இது நீண்ட நேரம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு அதிகமான பிரச்சனையாக இருக்கும். கோடை காலத்திலும் உங்கள் சருமம் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்க வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஒரு பேஸ்ட் தயாரிக்க முடியும்.

இதை குளிக்கும் போது உடல் முழுவதும் தடவி குளிப்பதன் மூலம் சருமம் இழந்த பொலிவை பெறுவதுடன் பளபளப்பையும் பெறும். இது பற்றி முழுமையாக இங்கு பார்க்கலாம்.

வெயிலால் பொலிவிழந்த சருமத்தை மீள பெற வேண்டுமா? இந்த ஒரு பேஸ்ட் போதும் | Skin Care Tan Removal Pack Beauty Glow Skin

பொலிவிழந்த சருமத்திற்கு மஞ்சப்பேஸ்ட்

இந்த பேஸ்ட் தயாரிக்க

கடலை மாவு - 2-3 தேக்கரண்டி

அரிசி மாவு - 2-3 தேக்கரண்டி

மஞ்சள் - 1 தேக்கரண்டி

தக்காளி விழுது - 1/2 கிண்ணம்

காபி தூள் - 1 தேக்கரண்டி

இதை கூறப்பட்ட அளவில் சரியாக எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் முதலில், ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள், தக்காளி  மற்றும் காபி சேர்க்கவும்.

வெயிலால் பொலிவிழந்த சருமத்தை மீள பெற வேண்டுமா? இந்த ஒரு பேஸ்ட் போதும் | Skin Care Tan Removal Pack Beauty Glow Skin

இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் தயாரிக்கவும். இப்போது அதை உங்கள் முகம், கைகள், கால்கள் மற்றும் முழு உடலிலும் தடவவும். இதை உடலில் சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

நேரம் முடிந்ததும், ஸ்க்ரப் செய்து, உடல் மற்றும் முகத்திலிருந்து பேக்கை கழுவ வேண்டும். இதன் பின்னர் குளிக்கலாம். குளித்து முளித்தவுடன் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

வெயிலால் பொலிவிழந்த சருமத்தை மீள பெற வேண்டுமா? இந்த ஒரு பேஸ்ட் போதும் | Skin Care Tan Removal Pack Beauty Glow Skinஇந்த பேஸ்ட் உண்மையில் ஒரு பெலிவான சருமத்தை கொடுக்கும். இதை வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.