இந்த இயற்கை நமக்கு பரிசாக கொடுக்கும் முதல் விடயமும் இளமை தான் அது முதலாவதாக பறித்துக்கொள்ளும் விடயமும் இளமை தான்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தனித்துவ ஆளுமை, நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களில் அதிகம் ஆதிக்கம் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் வயதானாலும் நீண்ட காலத்துக்கு அதே இளமை பொலிவுடன் இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
அழகு மற்றும் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் என்று இளமையாக இருக்கும் வரத்தை பிறப்பிலேயே பெற்றவர்களாக கருதப்படுகின்றார்கள்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பரத்தின் மீது தீராத மோகம் கொண்டவர்களாகவும், மற்றவர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற உன்னத எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே தங்களின் அழகை பராமரிப்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.இது அவர்களின் இளமை தோற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் மற்றொரு ராசியான துலாம் ராசியினர் இயற்கையாகவே அழகு மற்றும் அமைதிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் தோற்றம் மற்றவர்களை வெகுவாக ஈர்க்கும் அளவுக்கு வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.
இவர்கள் உடல் அழகை பராமரிக்கும் உடற்பயிற்சி, யோகா கலை போன்றவற்றின் மீது ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
எந்த சூழ்நிலையிலும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்தும் கொடுக்கும் இவர்களின் குணம் இவர்களின் நீண்ட இளமைக்கு காரணமாக அமைகின்றது.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்தால் இயற்கையாகவே இவர்களிடம் ஒரு தனித்துவமான பிரகாசம் மறைந்திருக்கும்.
இவர்கள் நீடித்த இளமையும் அழகும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் தோற்றத்தில் எப்போதும் அக்கறையும், பெருமையும் கொண்டிருப்பார்கள்.
தங்களின் அழகின் மீது அவர்களுககே இருக்கும் காதல் காரணமாக இவர்கள் நீண்ட இளமை கொண்டவர்களாக இருப்பார்கள்.