உலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருந்தாலும் அதனை ஆவலுடன் தெரிந்து கொள்ளும் பொழுது அதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த உலகில் உள்ள நாடுகளில் அனைத்தும் 12 மணி நேரம் கொண்ட கடிகாரத்தை தான் பயன்படுத்துகிறது என இதுவரை காலமும் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் 12 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் குறைவாக 11 மணி நேரம் கொண்ட கடிகாரத்தை பயன்படுத்தும் நாட்டின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக 11 மணி நேரம் கொண்ட கடிகாரம் என்றால் சற்று வியப்பாக உள்ளது. சுவிட்சர்லாந்தின் வடமேற்கு உள்ள “சோலோதர்ன்” நகரில் இப்படியொரு கடிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது? | Which City Clock Is Never 12 O Clock

அந்த வகையில் 11 மணி நேரம் கொண்ட கடிகாரம் பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

ஆடம்பர கடிகாரங்கள்

சோலோதர்ன் நகரின் மையத்தில் டவுன் சதுக்கத்திற்கு முன்னால் உள்ள 11 மணி நேரம் கொண்டு அமைக்கப்பட்ட கடிகாரம் ஒன்று உள்ளது. இதனை பார்ப்பதற்காகவே பல நாடுகளில் இருந்து பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

குடித்த கடிகாரத்தில் 12 என்ற ஒரு இலக்கமே இருக்காது, இது கடிகாரம் மட்டுமல்ல, இந்த நகரத்துடன் 11 என்ற எண்ணின் உறவும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறது.

எண் 11 நகரத்தில் உள்ள எல்லாவற்றுடனும் தொடர்பு உள்ளது என கூறுகிறார்கள்.

இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது? | Which City Clock Is Never 12 O Clockஉதாரணமாக, நகரத்தில் 11 அருங்காட்சியகங்கள், 11 தேவாலயங்கள், 11 நீரூற்றுகள் போன்ற பல விடயங்கள் 11-ல் வைத்திருக்கிறார்கள். சுமாராக 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள், சோலோதர்ன் நகரத்தை நிறுவியுள்ளனர். அந்த சமயத்தில் அவ்வளவு பிரபலமாக இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல இந்த நகரத்துடன் 11 என்ற எண் இணைக்கப்பட்டது.

கடந்த 1215 ஆம் ஆண்டு சோலோதர்னில் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​11 பிரதிநிதிகள் இருந்தாக வரலாற்று சான்றுகள் உள்ளன. 1481 இல் சோலோதர்ன் 11 வது மாகாணமாக சுவிஸ் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டு, 11 நகர காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது? | Which City Clock Is Never 12 O Clock

இதனை தொடர்ந்து, கடந்த 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குறித்த நகரத்தில் “புனித அர்சஸ் தேவாலயம்” அமைக்கப்பட்டது. இதில், 11 கதவுகள், 11 ஜன்னல்கள், 11 வரிசைகள் மற்றும் 11 மணிகள் மற்றும் கட்டுமானத்தில் 11 வகையான கற்களும் பயன்படுத்தப்பட்டடுள்ளன.

இந்த கடிகாரம் நகரத்தின் எண் 11 உடன் அவ்வளவு நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக அந்த நகரில் வாழும் மக்கள் நம்புகிறார்கள். இது தான் அந்த கடிகாரத்தில் 11 இலக்கங்கள் இருப்பதற்கான காரணம் என பலரும் கூறுகிறார்கள். 

இங்கு 12 மணி நேரம் கிடையாதாம்.. 11 மணி நேரம் கொண்ட கடிகாரம்- எந்த நாட்டில் உள்ளது? | Which City Clock Is Never 12 O Clock