தமிழக அரசியலில் முக்கிய தலைவராக வலம் வந்தவர் செல்வி ஜெயலலிதா. இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்ததை அடுத்து அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை வெப் சீரிஸ் தொடராக படமாக்கி வெளியிட்டுள்ளார்.
ஏ எல் விஜய் நடிகை கங்கனா ரனாவத் கைவைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார்.
இந்த படத்திற்காக கங்கனா ரனாவத் 10 கிலோ வரை உடல் எடையை கூட்டி ஜெயலலிதா போலவே மாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு பிரத்தியேகமான மேக்கப் போடப்பட்டுள்ளது.
இப்படம் OTT வழியாக வெளியாகும் என பேச்சுகள் கிளம்பிய நிலையில் இதனை திரையரங்குகள் வழியாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா சட்டசபையில் இருப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன இதுகுறித்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது கங்கனா ரணாவத் கொஞ்சமும் இதற்கு செட் ஆகவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய கெட்டப் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
#Thalaivi team wraps up one more schedule ,BTS pics of #KanganaRanaut from sets !!@KanganaTeam #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @thearvindswami @itsBhushanKumar @KarmaMediaent @TSeries @vibri_media pic.twitter.com/b9aZ7HMsFg
— 🎬PrabuTalkies🎥 (@PrabuTaalkies) October 11, 2020