ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியை போன்றே, அவர்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள் மற்றும் நிதி நிலையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இயல்பிலேயே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | People Born On These Nakshatras Are Good Hearted

அப்படி தங்களை வருத்திக்கொண்டு மற்றவர்களை மகிழ்விக்கும் உன்னத பண்பு கொண்ட நட்சத்திரத்தினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேவதி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | People Born On These Nakshatras Are Good Hearted

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நெருக்கடியில் இருக்கும் போதும் கூட மற்றவர்களுக்கு உதவும் குணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். தங்களால் முடிந்ததை எப்படியாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இவர்களின் வார்த்தைகளில் எப்போதும் உண்மையும் நேர்மையும் கலந்திருக்கும். மிகுந்த பொறுமையும் நிதானமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உத்திராடம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | People Born On These Nakshatras Are Good Hearted

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களின் தேவையை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துக்கொள்வதுடன், தங்களால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வார்கள்.

இவர்களின் பேச்சு எப்போதும் மிகவும் மென்மையாகவும், பணிவாகவும் இருக்கும். இவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் ஏழைகளுக்கு உதவும் குணத்தையும் அவர்களுக்கு மதிப்பளிக்கும் பண்பையும் கொண்டிருப்பார்கள்.

உத்திரட்டாதி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | People Born On These Nakshatras Are Good Hearted

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் இரக்கத்தின் மறு உருவமாகவும் இருப்பார்கள். 

இவர்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தங்களை வருத்திக்கொள்ளவும் தயாராக இருப்பார்கள். இவர்களிடம் அளவுக்கு மீஞ்சிய கருணை இருக்கம்.

மற்றவர்கள் உதவி என்று கேட்டு விட்டால் எப்படியாவது செய்து கொடுக்க வேண்டும் என போராடுவார்கள். இவர்களுக்கு சமூக சேவையில் ஈடுபடுவதில் அலாதி இன்பம் இருக்கும்.