ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளை அடிப்படையாக கொண்டு ராசிகளுக்கான பலன்கள் மாறுப்படும்.

இதன்படி, பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் பல நல்ல விடயங்கள் மற்றும் யோகங்கள் உருவாகவுள்ளன.

இந்த யோகங்களால் மே மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டு வரும்.

அந்த வகையில், பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டின் மே மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மே மாதத்தில் இந்த 6 ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம்- உங்கள் ராசி உள்ளதா? | May Month Rasi Palan 2025 In Tamil

   மேஷம் மேஷம் ராசியில் பிறந்தவர்களுகு்கு மே மாதம் தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பாக உண்டாகும். அலுவலகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். பல வாய்ப்புக்கள் கிடைப்பதால் உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கோபத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் ஆரோக்கிய மாற்றம் நன்றாக இருக்கும். புதிய வேலைக்களுக்கான வாய்ப்பு வரும். செலவுகளில் சற்று கவனம் தேவை. மே மாதம் வெற்றி உண்டாகும்.
ரிஷபம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் தொடர்பான விடயங்களில் கவனம் தேவை. புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் குடும்ப பிரச்சினைகள் வருவது குறைவதக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
 மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாதத்தில் புதிய திட்டங்களில் பணியாற்ற வாய்ப்பு வரும். வேலையில் மாற்றம் ஏற்படுவதால் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதனால் லாபத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரிகளாக இருப்பவர்களுக்கு குடும்பத்தில் பதற்றம் ஏற்படும். ஆகவே சற்று கவனம் தேவை. 
கடகம் கடக ராசிக்காரர்களுக்கு மே மாதத்தின் ஆரம்பத்தில் அதிகம் உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கும். அப்போது குடும்ப ஆதரவை பெற்றுக் கொள்ளவும். தியானம், யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தினால் மன அமைதி கிடைக்கும். சனி பகவானின் ஆசியால் வருமான ஆதாரங்கள் திறக்கப்பட்டு நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பு உருவாகும். மற்றவர்களுடன் நல்லதொரு உறவை பேணுவீர்கள். 
சிம்மம் சிம்ம ராசிக்காரர்கள் மே மாதத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் இழந்து போன தலைமைத்துவ பண்புகளில் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சனி, ராகு, கேது, செவ்வாய் சில பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை சீராக இருப்பதால் சேமிப்பு பழக்கம் உண்டாகும்.
கன்னி கன்னி ராசிக்காரர்கள் மே மாதம் தொழில் ரீதியாக பரபரப்பாக இருப்பார்கள். குறுகிய பயணத்தில் நல்லதொரு மாற்றத்தை காண வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படும். இதனால் வேலையில் சில சவால்களை சந்திக்க வேண்டி வரும். கவலைப்படாமல் அடுத்த வேலையை பார்க்க வேண்டும். புதிய சொத்துக்களின் வரவு இருக்கும். உயர் கல்வி கற்கும் வாய்ப்பு வரும். எனவே வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்
துலாம் துலாம் ராசியில் பிறந்தவர்கள் உறவுகளில் இனிமையாக இருப்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் வீட்டிற்கான செலவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் ஒரு சில பிரச்சினைகள் வரும். தொழிலில் எந்தவித அவசரமும் இல்லாமல் முடிவுகளை எடுக்க வேண்டும். வியாபாரிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ராகுவால் இந்த மாதம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு மே மாதம் ஒரு சில மன அழுத்தங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. வேலைச் செய்யும் இடங்களில் பிரச்சினைகள் வரலாம். கடின உழைப்புக்கான பலன்கள் உங்களை வந்து சேரும். முன்னேற்றம் இருப்பதால் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புக்கள் அதிகமாகும்.
தனுசு  தனுசு ராசியில் பிறந்தவர்கள் நிறைய பயணங்கள் செய்வார்கள். வாழ்க்கையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலையில் பொறுமை அவசியம். ஏனெனின் உங்களின் கோபம் உங்களின் வேலையை இல்லாமலாக்கி விடும். பேசி பிரச்சனையை சரிசெய்ய முயற்சி செய்வது நல்லது. கேதுவின் நிலையால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
மகரம்  மகர ராசியில் பிறந்தவர்கள் மே மாதத்தில் பிரச்சினைகளுக்கு முடிவுக் காண்பார்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாக இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சுமாராக இருக்கும்.
கும்பம் கும்ப ராசிக்காரர்கள் மே மாதத்தில் சிந்தனையில் புதுமை காண்பார்கள். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு வெற்றிக் கிடைக்கும். நிதி ரீதியாக, நல்ல லாபத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. பணத்தை சேமிக்க முயற்சிப்பது சிறந்தது. குரு மற்றும் சுக்கிரன் ஆசியால் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். சனி பகவானின் நிலையால், அவ்வப்போது சில ஆரோக்கிய பிரச்சனைகளும் வரலாம். 
 மீனம் மீன ராசியில் பிறந்தவர்கள் மே மாதத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து காணப்படுவார்கள். வேலையில் கவனம் தேவை. இதுவரையில் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிபடியாக குறையும். பெருமளவிலான லாபம் கிடைப்பதால் சனி பகவானின் நிலையின் திருப்பம் ஏற்படும். குறைவாகவே பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.