சருமம் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு முல்தானி மெட்டியை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பெரும்பாலான நபர்கள் முகத்தை எப்பொழுதும் அழகாககவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்வதற்கே விருமபுவார்கள்.

இதற்காக செயற்கை தயாரிப்பு அழகு சாதன பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஆனால் நமது சமையலறையில் பல அழகு பராமரிப்பு பொருட்கள் உள்ளன. அவை உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும்.

இதனை 15 நாட்களுக்கு ஒருமுறை முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தினால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

பளபளப்பான சருமம் வேண்டுமா? முல்தானி மெட்டி இப்படி பயன்படுத்தினால் போதும் | How To Use Multani Mitti On Face Glowing Skin

தேவையான பொருட்கள்

பீட்ரூட் சாறு - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
முல்தானி மிட்டி - 1 தேக்கரண்டி

முதலில் கிண்ணம் ஒன்றில் பீட்ரூட் சாறு, முல்தானி மிட்டி, தயிர் இவற்றினை சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று கலந்து கொள்ளவும்.

பேக் கெட்டியாகத் தெரிந்தால், அதில் அரை ஸ்பூன் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். குறித்த பேக்கை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். அதன் பின்பு முகத்தை தண்ணீரில் கழுவினால் பிரகாசமாக இருக்கும்.

பளபளப்பான சருமம் வேண்டுமா? முல்தானி மெட்டி இப்படி பயன்படுத்தினால் போதும் | How To Use Multani Mitti On Face Glowing Skin

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறு எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சரியான தீர்வைத் தரும். கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி மற்றும் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேரத்து பேஸ்ட் போன்று கலந்து சருமத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

பளபளப்பான சருமம் வேண்டுமா? முல்தானி மெட்டி இப்படி பயன்படுத்தினால் போதும் | How To Use Multani Mitti On Face Glowing Skin

இதே போன்று ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் முல்தானி மிட்டி ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து மென்மையான பேஸ்டாக தயாரித்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் அழகு அதிகரிக்கும்.

தேங்காய் நீரில் கலந்த முட்டானி மிட்டி சரும பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட உதவும். இதை முகத்தில் இருந்து பழுப்பு நிற புள்ளிகள் மற்றும் பிற குறைபாடுகளை அகற்ற உதவும்.