பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் செல்வ செழிப்புடன் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என நிச்சயம் ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அப்படியான அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசியானது எப்படி நிதி நிலை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றில் ஆதிகம் செலுத்துகின்றதோ, அதே போல் பிறந்த மாதமும் நிதி நிலையை தீர்மாணிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என குறிப்பி்டப்படுகின்றது.
அந்த வகையில் 12 மாதங்களுள் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறற்தவர்கள் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்கள் நிதி ரீதியில் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே சொகுசு வாழ்க்கை மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் வெற்றியில் அதிர்ஷ்டம் பெரும்பங்கு வகிக்கும்.
இந்த மாத்ததில் பிறந்தவர்களின் மன உறுதி, கடின உழைப்பு மற்றும் நீண்ட கால திட்டமிடல் திறன் ஆகியவை வாழ்க்கையில் இவர்கள் நிதி ரீதியில் உச்சத்தை தொடுவதற்கு பெரிதும் துணைப்புரியும்.
இவர்களின் அதிஷ்டம் காரணமாக குறைந்த உழைப்பிலேயே அதிக லாபம் ஈட்டும் யோகம் இவர்களுக்கு கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும் வகையில் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற்றம் அடைவார்கள். இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே ராஜ யோகம் கொண்டவர்களாகவும் பணம் உட்பட அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் வலிமையான ஆசை மற்றும் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டு அதனை தினம் தோறும் கற்பனை செய்து நினைத்ததை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
மற்றவர்களுக்கு கொடுக்கும் குணம் இவர்களிடம் அதிகமாக இருப்பதால், வாழ்க்கை முழுவதும் இவர்களிடம் பணம் சேர்ந்துக்கொண்டே இருக்கும்.
அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமிக்க பதவிகளில் இருப்பார்கள். இவர்களின் நீதி நேர்மைக்கு ஏற்ற வகையில் ஆடம்பர வாழ்க்கை வாழும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதீதி நிதி முகாமைத்துவ அறிவுடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் வெற்றியில் அதிர்ஷ்டத்தின் பங்கு நிச்சயம் இருக்கும்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் மட்டுமின்றி தங்கள் நடைமுறை அணுகுமுறை மற்றும் பகுப்பாய்வு மனப்பான்மையுடன், நீண்டகால வெற்றிக்காக அயராது பாடுபடும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்களின் அதிஷ்டத்துடன் கடின உழைப்பும் சேரும் போது மற்றவர்களை பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு பணக்காரர்களாக மாறிவிடுவார்கள்.
இவர்கள் வெற்றிக்கான வழிகளை எளிதில் அடையாளம் காணும் திறமை கொண்டவர்களாக இருப்பதும் இவர்களிடம் செல்வம் குவிவதற்கு முக்கிய காரணியாக இருக்கும்.