தோசைக்கு கார சாரமான கடப்பா  சட்னி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - ஒரு துண்டு (ஒரு இன்ச் அளவு)

பூண்டு - 6 பல்

தக்காளி - 2 (நன்றாக பழுத்தது

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு

புளி - சிறிதளவு(சிறிய நெல்லிக்காய் அளவு)

தேங்காய் - ½ மூடி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி... தோசைக்கு அட்டகாசமான ரெசிபி | How To Prepare Andhira Kadappa Chutney

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ¼ டீ ஸ்பூன்

கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு- ¼ டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி... தோசைக்கு அட்டகாசமான ரெசிபி | How To Prepare Andhira Kadappa Chutney

செய்முறை:

பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், பூண்டு மற்றும் இஞ்சியை தோல்நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவியும், தக்காளியை இரண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.

எண்ணெய் காய்ந்த பின்பு எள்ளு சேர்த்து வதக்க வேண்டும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி இவற்றினை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளற வேண்டும். இதனுடன் புளியை சேர்த்து வதக்கவும்.

கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.

பின்பு வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

ஆந்திரா ஸ்டைல் கடப்பா சட்னி... தோசைக்கு அட்டகாசமான ரெசிபி | How To Prepare Andhira Kadappa Chutney