ஒருவரின் பிறப்பு ராசியானது அவரின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவலில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே காதல் விடயத்தில் கில்லாடிகளாக இருப்பார்களாம். இந்த ராசியினருக்கு திருமணத்தின் முன்னர் பல்வேறு காதல் தொடர்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiacs Have Multiple Love Before Marriage

அப்படி திருமண பந்தத்தில இணைவதற்கு முன்னர் காதல் மன்னர்களாக திகழும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiacs Have Multiple Love Before Marriage

மீன ராசியில் பிறந்தவர்கள் அதிகம் கற்பனை திறன் கொண்டவர்களாகவும் சினிமா பாணியில் வாழ்க்கை வாழ விரும்பும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

அவர்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்பவர்கள் மீது கூட அவர்கள் காதலில் விழும் வாய்ப்பு காணப்படுகின்றது. இதனால் இளம் வயதை அடையும் போது பல்வேறு காதல் உறவுகளை கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். 

அந்த ராசி ஆண்கள் வாழ்நாள் முழுவதும் காதலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள், எனவே அவர்கள் அதை எங்கு பார்த்தாலும் உடனடியாக காதலிக்கத் ஆரம்பித்துவிடுவார்கள். 

இது உண்மையான காதலா அல்லது ஒரு சாதாரண ஈர்ப்பா என தெரிவதற்கு முன்னரே காதல் கனவுகளை காண ஆரம்பித்துவிடுவார்கள்.

துலாம்

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiacs Have Multiple Love Before Marriage

துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் இதயத்தை காதலுக்காகத் திறந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இயல்பாகவே இருக்கும் வசீகர தன்மை மற்றும் காந்த பார்வை இவர்களுக்கு அதிகப்படியான காதல் கிடைப்பதற்கு காரணமாக அமைகின்றது.

அவர்கள் எல்லோரிடமும் உள்ள அழகைப் பார்ப்பவராக இருப்பதால், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு பெண்களின் மீது காதல்வயப்படும் வாய்ப்பு அதிகம். 

அவர்கள் சந்திக்கும் அனைத்து பெண்களிடடும் உள்ள நல்ல குணங்களிலும் கவனம் செலுத்துவதால், இவர்களின் கண்களுக்கு மற்றவரை்களின் குறைகள் புலப்படுவது கிடையாது. இதுவும் இவர்கள் பல காதலில் சிக்கிக்கொள்ள காரணமாக அமைகின்றது. 

சிம்மம்

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiacs Have Multiple Love Before Marriage

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே மற்றவர்களை நொடியில் ஈர்ககும் வசீகர தன்மை இவர்களிடம் நிச்சயம் இருக்கும். மேலும் இவர்கள் மற்றவர்களை அடக்கியாளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த ராசியினர் பெரும்பாலும் உற்சாகமான மற்றும் மிகவும் மகிழ்ச்சியான காதல் உறவை விரும்புகிறார்கள், எனவே அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல முறை காதலில் விழும் வாய்ப்பு காணப்படுகின்றது.

அவர்கள் தீவிரமான காதல் உறவுகளை விட தற்காலிக மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களாக இருப்பார்கள். அதனால் விளையாட்டுத்தனமான காதல் உறவை அதிகம் விரும்புகிறார்கள்.

இந்த ராசி ஆண்கள் காதலிக்கப்படுதை உணர விரும்புகிறார்கள், எனவே ஒரு காதல் முடிவுக்கு வந்தால் அவர்கள் உடனடியாக அடுத்த காதல் உறவை தேட ஆரம்பித்துவிடுவார்கள்.