பொதுவாகவே நாம் சில நேரங்களில் ஆரம்பிக்கும் வேலைகளை மிகவும் உற்சாகமாக செய்து முடிப்போம்.ஆனால் சில நேரங்களில் அதே வேலையை செய்ய மிகவும் சோர்வாகவும் கடினமாகவும் உணர்ந்திருப்போம்.

இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப்பார்த்ததால், பெரிதாக காரணம் ஒன்றும் இருக்காது. ஆனால் சில விடயங்கள் ஆரம்பித்த வேகத்தில் வெற்றிகரமாக முடியும்.

Astrology: இந்த நேரத்தில் ஆரம்பிக்கு வேலை நிச்சயம் வெற்றி தான்... ஏன்னு தெரியுமா? | Whatever You Do It At This Time Will Be Success

சில விடயங்களை எவ்வளவு முயற்சித்தாலும் நாம் நினைத்த இலக்கை அடைய முடியாத நிலை இருக்கும். அதற்கு சாஸ்திரங்களின் அடிப்படையில் நாம் அந்த வேலையை ஆரம்பித்த நேரம் தான் காரணமாக இருக்கும்.

ஜோதிட கணிப்புகளில் பிரகாரம் ஒவ்வொரு நாளிலும் இருக்கும் 24 மணிநேரம் 8 ஓரைகளாக பிரிக்கப்படுகிறது.

Astrology: இந்த நேரத்தில் ஆரம்பிக்கு வேலை நிச்சயம் வெற்றி தான்... ஏன்னு தெரியுமா? | Whatever You Do It At This Time Will Be Success

அந்த வகையில் ஒவ்வொரு ஓரைக்கும் ஒரு கிரகம் அதிபதியாக அமைகிறது. அப்படி சுக்கிரன் (வெள்ளி கிரகம்) ஆட்சி செய்கிற ஓரைதான் “சுக்கிர ஓரை” எனப்படுகிறது.

சுக்கிரன், இன்பம், கலை, இசை, பொழுதுபோக்கு, பணம், மகிழ்ச்சி, திருமணம், அழகு, அன்பு போன்ற அம்சங்களில்ஆதிக்கம் செலுத்துவதால், இந்த நேரங்களில் ஆரம்பிக்கும் வேலைகள் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது.

Astrology: இந்த நேரத்தில் ஆரம்பிக்கு வேலை நிச்சயம் வெற்றி தான்... ஏன்னு தெரியுமா? | Whatever You Do It At This Time Will Be Success

திருமணம் தொடர்பான பேச்சுக்கள், ஷாப்பிங், பரிசுகள் வாங்குவது,  கலை நிகழ்வுளை ஆரம்பிப்பது விருந்துக்கு செல்லல்  வாகனம் வாங்குவது, மாடுகள் வாங்குவது,  தொழில் தொடங்குவது , கடன் வசூலிப்பு முயற்சியில் ஈடுப்படுவது போன்ற  உங்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பலனான கொடுக்கக்கூடிய எந்த விடயத்தையும் சுக்கிர ஓரையில் ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு வேலையை ஆரம்பிக்கும் போதும் அதனை  சரியான நேரத்தில் ஆரம்பித்ததால் தான் அதில்  வெற்றியடைய முடியும். அப்படி வெற்றியை கொடுப்பதில்  சுக்கிர ஓரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Astrology: இந்த நேரத்தில் ஆரம்பிக்கு வேலை நிச்சயம் வெற்றி தான்... ஏன்னு தெரியுமா? | Whatever You Do It At This Time Will Be Success

வாழ்வில் சந்தோஷம், வெற்றி, அமைதி மற்றும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றால், முக்கியமான ஒரு வேலை தொடங்கும் முன், சுக்கிர ஓரை எப்போது என்பதை நிச்சயம் பார்த்து ஆரபிப்பது சிறந்தது. 

இந்த சுக்கிர ஓரை ஒரு பூரணமான நல்ல நேரம் என்றாலும், குறிப்பிட்ட சில விஷயத்தில் மட்டும் இந்த நேரத்தில் ஆரம்பிப்பது வெற்றியளிக்காது என குறிப்பிடப்படுகின்றது.  மருத்துவ சிகிச்சை பெற குறிப்பாக கண் சிகிச்சைக்கு இந்த நேரம் உகந்ததாக அமையாது. இது தவிர மற்ற அனைத்து வேலைகளுக்கும் இந்த சுக்கிர ஓரையி்ல் ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.