ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை காதல் வாழ்க்கை, விசேட ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் துணையை காதல் செய்வதிலும் ரொமான்டிக்காக பேசுவதிலும் வல்லவர்களாக இருப்பார்களாம்.அப்படி காதல் மன்னர்களாக திகழும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரொமான்ஸில் தூள் கிளப்பும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Male Zodiac Sign Is The Most Romantic Person

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே காதல் மற்றும் திருமணம் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ரொமான்ஸில் தூள் கிளப்பும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Male Zodiac Sign Is The Most Romantic Person

இவர்களுக்கு காதல் பக்கத்தை வெளிப்படுத்துவது எளிதாக வரும். துணையை கவரும் வித்தைகளை நன்கு கற்றுதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் காதலில் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். மற்ற பெண்கள் பொறாமை படும் அளவுக்கு இவர்களின் காதல் இருக்கும். துணையை மகிழ்சிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பார்கள்.

துலாம்

 துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் நல்லிணக்கம், அமைதி மற்றும் நீதியை விரும்பும் குணம் கொண்டவர்களாகவும் காதல் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ரொமான்ஸில் தூள் கிளப்பும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Male Zodiac Sign Is The Most Romantic Person

இந்த ராசி ஆண்கள் துணையிடம் ரொமான்ஸ் செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். பிரியும் நிலையில் இருக்கும் உறவையும் கூட தங்களின் மென்மையான பேச்சாற்றலால் தக்கவைத்துக்கொள்ளும் திறன் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

இவர்கள் இயல்பாகவே  பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதுடன் வாழ்க்கை துணையாக வரும் பெண்ணை பூ போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே ரோமியோவாகத்ததான் இருப்பார்கள். சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் பெண்களை காந்தம் போல் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

ரொமான்ஸில் தூள் கிளப்பும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Male Zodiac Sign Is The Most Romantic Person

இந்த ராசி ஆண்களை அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தங்களின் துணைக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் காதலை வெளிப்படுத்தும் விதமே சற்று சினிமா பாணியில் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். இந்த ராசி ஆண்களை காதலனாக பெற்ற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்.