இராமாயண காவியம் நம் நாட்டின் இலக்கிய பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கணக்கிட முடியாத வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களுக்கு இன்றும் சான்றுகள் உள்ளன.

இந்த காவியத்தை படிப்பதும் இந்தியாவை சுற்றுப்பயணம் செய்வதும் ஒன்றுதான்.

அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு இந்தக் கதை பயணிக்கிறது. இலங்கை நாட்டிலும் சில சான்றுகள் பக்தர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இராமாயணம் பற்றிய சான்றுகள் உள்ள இடங்களை பார்க்க வேண்டும் என ஆசைக் கொள்பவர்கள் இந்த 5 இடங்களை பார்க்கலாம். அப்படியான இடங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.  

இராமாயணத்தில் வரும் 5 இடங்களை சுற்றி பார்க்கணும் ஆசையா? அப்போ இந்த இடங்களுக்கு போங்க | Places In India With Evidence Of Ramayana In Tamil

ஜனக்பூர் ஜனக்பூர் ஶ்ரீ ராமரின் மனைவி சீதை வளர்ந்த மிதிலை நாட்டின் தலைநகரமாக உள்ளது. இந்த இடம் நேபாளத்தில் உள்ளது. ஜனகபூரில் சீதாதேவிக்கு ஜானகி மந்திர் என்ற பெயர் கொண்ட கட்டியுள்ளார். பார்ப்பதற்கு அரண்மனை போன்று காணப்படும் இந்த கோயில் அருகில் ராம் மந்திரும் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இராமர் சீதாவிற்கும் திருமணம் நடைபெற்ற இடத்தில், இராமர் சீதாவிவாஹ மண்டபம் தனியாக கட்டப்பட்டுள்ளது. நேபாளின் பக்தியை இந்த கோயில்கள் காட்டுக்கிறது. ஜனக்பூர் செல்ல காட்மாண்டுவரை விமானத்தில் சென்று, அங்கிருந்து ரயில் அல்லது சாலை வழியாக பயணம் செய்யலாம். 
அயோத்தி  ஜனக்பூரில் இருந்து ரயில் அல்லது பஸ் மூலம் அயோத்தியை பார்க்கலாம். உலகின் மிக பழமையான நகரமாக பார்க்கப்படும் இந்த இடத்தை ஶ்ரீ ராமர் பிறந்த புண்ணிய பூமியாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள கோயில் நவீன கட்டிடக் கலையின் சிறப்பை பறைசாற்றுகிறது. இந்த ராமர் கோயிலுக்கு செல்லும் முன் சாய்நகரில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கர்ஹி கோயிலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் இருந்து தான் ஹனுமான் அயோத்தி நகரை காவல் செய்துள்ளாராம். ராமரின் மகன் குஷன் கட்டிய பிரம்மாண்டமாக நாகேஸ்வர்நாத் கோயிலையும் பார்க்கலாம். அத்துடன் ராஜா மந்திர், ராம்கதா பூங்கா, சோட்டி சாவ்னி போன்ற இடங்களையும் அங்கு சென்றால் பார்க்கலாம்.  
கிஷ்கிந்தா

அயோத்தியில் விமானம் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து சாலை வழியாக கிஷ்கிந்தாவை பார்க்கலாம். கிஷ்கிந்தா என அழைக்கப்படுவது இராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஹனுமான், வாலி, சுகிரீவன் உள்ளிட்ட வானரங்கள் வாழ்ந்த பகுதியாகும். இங்குள்ள ஹம்பியில் லேபாக்ஷி என்னும் சிறப்பு வாய்ந்த சிவன் கோயிலும் உள்ளது. இந்த இடத்தை சுற்றி ஏகப்பட்ட கதைகள் உள்ளன.

ஹம்பி அருகில் உள்ள ஆஞ்சநேய மலையில் ஹனுமான் பிறந்து வளர்ந்துள்ளாராம். அருகிலுள்ள ரிஷிமுக பர்வத மலையில் தன்னுடைய அண்ணன் வாலிக்கு பயந்து சுக்ரீவன் அனுமனுடன் தங்கியிருந்துள்ளார். அத்துடன் அங்கிருந்து தான் அனுமான் ஶ்ரீ ராமரையும் லட்சுமணனையும் சந்தித்தார் என்றும் கதை உள்ளது. வரலாற்று சான்றுகளை தேடுபவர்களுக்கு இந்த இடம் பயனுள்ளதாக இருக்கும்.  

ராமேஸ்வரம் கிஷ்கிந்தாவின் ஹம்பியிலிருந்து ரயில் அல்லது பேருந்து மூலம் ராமேஸ்வரம் வரலாம். ராமர் அவரது வானர சேனைகள் இங்கிருந்து இலங்கைக்கு செல்ல பாலம் ஒன்றினை கட்டியதாக புராணம் சொல்கிறது. இந்த பாலம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வரை செல்கிறது. ராமர் பாலத்தின் ஒருசில பகுதிகள் இன்றும் காணப்படுகிறது என்பதால் கதைகள் உண்மையென மக்கள் நம்புகிறார்கள். இலங்கை போரில் வென்று ராமேஸ்வரம் திரும்பிய ராமர், இராவணனைக் கொன்ற பாவத்திலிருந்து விடுபட ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பூஜை செய்துள்ளார். சேதுபதி மன்னர்கள் இந்த இடத்தில் பெரிய கோயிலை கட்டி வழிபாடு செய்துள்ளனர். ராமேஸ்வரம் கடல், தனுஷ்கோடி போன்ற சுற்றுலா இடங்களையும் இங்கு சென்றால் பார்க்கலாம்.