இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு, எடை இழப்பு, எலும்பு வலிமை, மலச்சிக்கல் தீர்வு என பல நன்மைகளை தரும் பாலக்கீரையை வாரத்தில் குறைந்தது மூன்று நாள் உணவில் சேர்த்தால், உடல்நலத்தில் கணிசமான மாற்றத்தை உணரலாம்.

இயற்கையின் அரிய வரப்பிரசாதமாக விளங்கும் இந்த கீரையை தினசரி உணவில் ஒரு பங்காக எடுப்பது அவசியம்.பாலக்கீரையில் உள்ள அண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச் சத்துகள், இதயத்தை வலுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

கலோரி குறைந்ததும், நார்ச்சத்து அதிகமுமான பாலக்கீரை, நீண்ட நேரம் நிறைவான உணர்வு தருவதால், தவறான உண்ணும் பழக்கங்களை கட்டுப்படுத்த முடிகிறது.

இதை மிகவும் காரமாக தொக்கு செய்து சாப்பிட்டால் அது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை தரும். சுகரரையும் கட்டுக்கள் வைத்திருக்கும்.

சுகரை கட்டுக்குள் வைக்கணுமா? பாலக்கீரையில் தொக்கு இந்த 2 பொருள் சேர்த்து செய்ங்க | Palak Keerai Spinach Benefits Food Recipe Tamil

தேவையான பொருட்கள்

  • எண்ணெய்- தேவையான அளவு
  • கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்
  • வர மல்லி- ஒரு ஸ்பூன்
  • சீரகம்- ஒரு ஸ்பூன்
  • வெங்காயம்-1
  • பூண்டு -6
  • மிளகாய் தூள்-1/4 ஸ்பூன்
  • தக்காளி-1/2 பழம்
  • புளி- சிறிய துண்டு
  • கடுகு-1/4 ஸ்பூன்
  • வெந்தயம்- சிறிதளவு
  • வர மிளகாய்-3
  • கருவேப்பிலை- தேவையான அளவு
  • பாலக்கீரை-250 கிராம்
  • உப்பு-தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு வதக்கவும். பின்பு மல்லி விதை, சீரகம் சேர்த்து, கருகாமல் மிதமான சூட்டில் வதக்கி, ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

சுகரை கட்டுக்குள் வைக்கணுமா? பாலக்கீரையில் தொக்கு இந்த 2 பொருள் சேர்த்து செய்ங்க | Palak Keerai Spinach Benefits Food Recipe Tamil

மீண்டும் அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். பின் பாதி தக்காளி, மிளகாய்தூள், மற்றும் ஒரு சிறிய துண்டு புளி சேர்த்து நன்கு வதக்கவும்.

இவை நன்றாக ஆறியதும், முந்தைய அரைத்த பொடியுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சாம்பார் பதத்திற்கு அரைக்கவும். ஒரு புதிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை தாளிக்கவும்.

சுகரை கட்டுக்குள் வைக்கணுமா? பாலக்கீரையில் தொக்கு இந்த 2 பொருள் சேர்த்து செய்ங்க | Palak Keerai Spinach Benefits Food Recipe Tamil

சுத்தம் செய்து நறுக்கிய கீரையை இதில் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின், முந்தைய அரைத்த மசாலாவை இதில் சேர்த்து கிளறவும்.

தேவையான உப்பு, விருப்பத்திற்கு ஏற்ற அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும். மிதமான வெப்பத்தில் 5 நிமிடங்கள் வேகவிட்டு, எண்ணெய் பிரிந்து வந்தவுடன் கீரை தொக்கு தயார்.