எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்கள் ஆவார்களாம். இதனால் இவர்களை சாதாரணமாக நினைப்பது தவறு. அப்படியானவர்கள் எந்தெந்த தேதியில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வழக்கமாக 26 ஆம் தேதி பிறந்தவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் பணத்தை ஈர்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களை சாதாரணமாக நினைத்து கடந்து போக நினைப்பவர்களுக்கு ஒரே இரவில் பதில் கொடுப்பார்கள். இரவில் கோடீஸ்வரர்களாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
4 ஆம் தேதி பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ரேடிக்ஸ் எண் 4-ஐ கொண்டிருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். வணிகம், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதிலும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இதனால் ஒரே இரவில் பணக்காரர்களாக மாறும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
இவர்களின் தனித்துவமான யோசனைகள் மூலம் தங்கம்-வெள்ளி உள்ளிட்டவற்றை வாங்கி ஆடம்பரத்தை ஈர்ப்பார்கள். இவர்களின் வெற்றியை யாராலும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது. முந்தைய வாழ்க்கையின் கடின உழைப்பு மற்றும் நேர்மையின் அடிப்படையில் இவர்களின் செல்வத்தை அதிகப்படுத்தும்.
ஊடகம், அரசியல், சட்டம், அறிவியல், விவசாயம் மற்றும் வங்கி போன்ற துறைகளில் வெற்றியாளர்களாக இருக்கும் இவர்கள் எப்போதும் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். தைரியம் உள்ளவர்களாகவும் சக ஊழியர்களுக்கு நிதியுதவி செய்பவர்களாகவும் இருப்பார்கள்.