ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னுடைய ராசியை மாற்றும். மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்கி 12 ராசிக்களில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

இப்படியான பெயர்ச்சிகளின் தாக்கங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில வேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட யோகங்கள் உருவாகும். ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக சுக்கிரன் பார்க்கப்படுகிறார்.

இவர், அழகு, ஆரம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அத்துடன் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செழிப்பு, ஆன்மீகம், புகழ் ஆகியவற்றின் காரணியாகவும் இருக்கிறார்.

மேலும், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் அரசு வேலை, தந்தை, தன்னம்பிக்கை, தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணியாக இருப்பதால் இளவரசனாக கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார்.

500 ஆண்டுகளுக்கு பின் வரும் 3 ராஜயோகம்- மிகப்பெரிய அதிர்ஷ்டம் காணப் போகும் 3 ராசிகள் | 3 Rajyog Formed After 500 Years Lucky Zodiac Signs

இந்த கிரகங்களின் நிலைகளால் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்கள் ஆகிய மூன்று யோகங்களை ஒரே வேளையில் நவம்பர் மாதத்தில் உருவாக்கவுள்ளது. இந்த அரிய நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

அந்த வகையில், 500 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.  

மகரம் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ஆகிய ராஜயோகங்களால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நடக்கும். அதிலும் குறிப்பாக மாளவ்ய ராஜயோகம் தொழில் மற்றும் வணிக ரீதியாக நல்ல பலன்களை கொண்டு வந்து தரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றன கிடைக்கும். அத்துடன் தொழிலதிபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழில் துவங்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த காலப்பகுதியில் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். 
கும்பம் கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் இதுவரையில் இருந்த கஷ்டங்கள் அனைத்தையும் சரிச் செய்வார்கள். மாளவ்ய ராஜயோகம் 9 ஆவது வீட்டிலும், ஹன்ஸ் ராஜயோகம் 6 ஆவது வீட்டிலும் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இவர்களுக்கு கிடைக்கும். வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைத்து புத்திசாலித்தனம் மற்றும் சாதுர்யத்தால் எதிரிகளிடம் இருந்து தப்பிக் கொள்வார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்கக்கூடும். 
கடகம் கடக ராசயில் பிறந்தவர்கள் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். இவர்களின் நம்பிக்கை இருமடங்கு அதிகமாகி, ஆளுமை அதிகரிக்கும். முன்னேற்றம் காணவும் வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் வரும். சிக்கலில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகள் முடிவுக்கு வந்து உறவுகள் செழிக்கும்.