உடலில் மச்சம் இருப்பது என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஒன்று.

மச்ச சாஸ்திர விதிப்படி, ஒருவருக்கு எந்த இடத்தில அல்லது எந்த நிறத்தில் மச்சம் இருக்கிறதோ அதற்கு ஏற்ற சுப பலன்கள், அசுப பலன்கள் உள்ளது.

அடர் கருப்பு நிற மச்சம்- அடர் கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

எந்த நிறத்தில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? | Predictions Various Of Colour Moles And Benefits

லேசான கருப்பு நிற மச்சம்- லேசான கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் அமைதியற்ற வாழ்க்கை அமையும் மற்றும் வருமானத்திலும் சற்று குறைபாடு இருக்கும்.

சாம்பல் நிற மச்சம்- இவ்வாறு இருந்தால் ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை மிக்கவராக திகழ்வார்கள். மேலும், வருமானத்திற்கு குறைவு இருக்காது. 

பழுப்பு நிற மச்சம்- பழுப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் மகான்களாக, கல்வியாளர், விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.

வெண்மை நிற மச்சம்- இவர்கள் பலசாலிகளாகவும், துணிச்சல் மிக்கவராகவும் மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்கள்.

சற்று நீல நிறமான மச்சம்- பழைமை விரும்பிகளாக இருப்பார்கள் மற்றும் வணிகத்துறையில் ஆர்வமாக இருப்பார்கள்.

எந்த நிறத்தில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? | Predictions Various Of Colour Moles And Benefits

குங்கும நிறத்தில் மச்சம்- குங்கும நிறத்தில் மச்சம் உள்ளவர்கள் உல்லாசப் பிரியர்களாக இருப்பார்கள்.

 மஞ்சள் நிற மச்சம்- கலகலப்பான இயல்பான குணம் கொண்டவர்கள் மற்றும் எல்லோரிடத்திலும் நட்புடன் பழகுவார்கள்.

எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?

  • நெற்றி- விசேஷம்.
  • வலது கண்- அதிர்ஷ்டம்.
  • இடது கண்- சுதந்திரம்.
  • மூக்கு- முன்கோபம்.
  • உதடுகள்- கல்வியில் உயர்ந்த நிலை.
  • முகவாய்- நல்ல அம்சம்.
  • வலது காது- அதிக பாசம்.
  • இடது காது- விரும்பிய வாழ்க்கை அமையும்.
  • நாக்கு- குழந்தை உள்ளம் படைத்தவர்கள்.
  • கழுத்து - மகிழ்ச்சி ஏற்படும்.
  • மார்பு- கலையில் சிறந்து விளங்குவார்கள்.
  • முதுகின் வலதுபுறம்- பெரிய லட்சியவாதி.
  • முதுகின் இடதுபுறம்- முயற்சிகளில் தோல்வி ஏற்படும்.