பேச்சாற்றல் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. ஆனால் அதனை எந்த இடத்தில் பயன்படுத்திக்கிறோம் என்பது மிக முக்கியமானது.

சிறந்த பேச்சாற்றல் உள்ளவர்கள் தங்களின் கருத்துக்களை மற்றவர்களிடம் தைரியமாக வெளிபடுத்துவார்கள். இதனால் சமூக உறவு, நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் தொடர்பாடலில் சிறப்பாக இருப்பார்கள். தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் ஆற்றல் மற்றவர்கள் மத்தியில் தலைமைத்துவத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் பேச்சாற்றலால் மற்றவர்கள் மனதை கட்டிப்போடும் ஆற்றல் படைத்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

வாயால் அனைத்தையும் சாதிக்கும் ராசியினர்- இவர்களிடம் பேச்சு கொடுக்காதீங்க | Which Zodiac Signs Are Communication Skills

மிதுனம் கிரகங்களின் இளவரசரான புதன் ஆளும் ராசியான மிதுன ராசிக்காரர்களுக்கு சிறந்த பேச்சு திறன் இருக்கும். தங்களின் கருத்துக்களை தெளிவாகவும் நகைச்சுவையாகவும் கூறுவார்கள். தங்கள் எண்ணங்களை மற்றவர்கள் மறுக்க முடியாத வகையில் வெளிப்படுத்துவார்கள். இந்த ஆற்றல் இயற்கை அவர்களுக்கு கொடுத்த பரிசாக பார்க்கப்படுகிறது. மற்றவர்களுடன் பேசும் திறன் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு இவர்களை கொண்டுச் செல்லும். இலக்கையும் உரையாடல்கள், விவாதங்கள் மற்றும் கலைத்துறை போன்றவற்றில் தெரிவு செய்வார்கள்.  
துலாம்

 

சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசி பிறந்தவர்கள் சக்திவாய்ந்த வகையில் தொடர்பாடலை வைத்து கொள்வார்கள். ராஜதந்திரம் மற்றும் சமநிலையான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் பேச்சை கவனமாக கேட்டு, அதற்கு சரியான பதிலை கொடுப்பார்கள். வெளிப்படையான உரையாடல் மற்றும் நேர்மையை ஊக்குவிப்பு உள்ள இவர்களை மற்றவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்வார்கள். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் விதிவிலக்கான திறன் உடையவர்களாக இருப்பார்கள்.
சிம்மம் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் மற்றவர்களுடன் சிறந்த தொடர்பாடல் வைத்து கொள்வார்கள். பொதுவெளியில் பேசும் பொழுது அவர்களின கவர்ச்சியான ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். வார்த்தைகள் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கவும், வசீகரிக்கவும் முடியும். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கையும், சக்திவாய்ந்த ஆளுமையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கருத்துக்களை எளிதாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பதில் கொடுப்பார்கள்.