பொதுவாகவே ரோட்டு கடைகளில் சாப்பிடும் உணவுகள் பலருக்கும் ரொம்பப் பிடிக்கும், அது சைவமா இருந்தாலும் சரி, அசைவமா இருந்தாலும் சரி.

வித்தியாசமான உணவுகளை ட்ரை பண்ணிப் பார்க்க வேண்டும் என்றால், நிச்சயம் ரேட்டுக்கடைகள் தான் சிறந்த தெரிவு.

ரோட்டு கடை பாணியில் அருமையான தவா சிக்கன்... இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க | Hotel Style Tasty Tawa Chicken Recipe In Tamil

இந்த ரெசிபி அப்படிப்பட்ட ஒரு ரெசிபி, தந்தூரி மசாலாவோட ஒரு எளிய தவா சின்னன் அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 சிக்கன் - 1 500 கிராம் 

பெரிய வெங்காயம் - 2 

தக்காளி - 1

பூண்டு - 6பல் 

இஞ்சி - சிறியது

பச்சை மிளகாய் - 1 

காய்ந்த மிளகாய் - 6 

எலுமிச்சம் பழம் - 1 

மஞ்சள் தூள் - 1½ தே.கரண்டி 

கொத்தமல்லி விதை - 2 மேசைக்கரண்டி 

சோம்பு - 1 மேசைக்கரண்டி

மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி

சீரகம் - ¾ மேசைக்கரண்டி 

கிராம்பு - 3 

அன்னாசி பூ - 1 

ஏலக்காய் - 2 

பட்டை - 4துண்டு 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு 

கருவேப்பிலை - சிறிதளவு

ரோட்டு கடை பாணியில் அருமையான தவா சிக்கன்... இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க | Hotel Style Tasty Tawa Chicken Recipe In Tamil

செய்முறை

முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து ,வெங்காயத்தை கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

ரோட்டு கடை பாணியில் அருமையான தவா சிக்கன்... இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க | Hotel Style Tasty Tawa Chicken Recipe In Tamil

அதனையடுத்து இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சியை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்து கொள்ள வேண்டும். 

பின்னர் கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு பிழிந்து விதை நீக்கி எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும்.

ரோட்டு கடை பாணியில் அருமையான தவா சிக்கன்... இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க | Hotel Style Tasty Tawa Chicken Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து சூடானதும் கொத்தமல்லி விதை, சோம்பு, சீரகம், கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், பட்டை மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து  பொன்னிறமாகும் வரையில் வறுத்து ஆறவிட வேண்டும்.

நன்பு ஆறிதும் அதை ஒரு  மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேணடும்.

அதனையடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வழக்கத்தை விட அதிக அளவில் எண்ணெய் சேர்த்து காயவிட வேண்டும்.

ரோட்டு கடை பாணியில் அருமையான தவா சிக்கன்... இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க | Hotel Style Tasty Tawa Chicken Recipe In Tamil

பின்னர் அதில் சீரகம் மற்றும் பட்டை சேர்த்து தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின் தக்காளி சேர்த்து நன்றாக மசிந்து வரும் வரை வேக விடவும்.அதனுடன் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடத்திற்கு வேக விடவும்.

பின் அதில் நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறி அரைப்பதம் வேக விடவும். அதில் மிளகு தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். 

இறுதியாக நறுக்கிய கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையான ரோட்டுகடை தவா சிக்கன் தயார்.