ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே யாராலும் தோற்கடிக்கவே முடியாத சிறந்த ஆளுமை மற்றும் திறமைகளை கொண்டிருப்பார்களாம்.
அடிப்படி வாழ்க்கையில் ஜெயிப்பதற்காவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்களில் மர்மமாக இயலபுக்கும் தீவிரத்தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே போட்டித்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். போட்டியென்று வந்துவிட்டால், நிச்சயம் வெற்றியடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் ஒருபோதும் தங்கள் பலவீனத்தை காட்டிக்கொள்ளவே மாட்டார்கள்.வாழ்க்கையின் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் வெற்றி பெற இறுதிவரையில் போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே முகாமைத்துவ திறன்களுடன் பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கடுமையான போட்டியுணர்வு காணப்படும்.
வெளித்தோற்றத்திற்கு அமைதியாக இருந்தாலும், போட்டியென்று வந்துவிட்டால் நிச்சயம் வெற்றி இவர்களுக்கு தான் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்க்கையில் நிலைத்தன்மை மற்றும் ஆறுதலை விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் போட்டி போட்டு ஜெயிப்பது இயலாத காரியம்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச மனப்பான்மைக்கும், சுதந்திர உணர்வுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே போட்டித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
அதனால் அவர்கள் சவால்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள்.வெற்றியின் மகிழ்ச்சியை மட்டுமே விரும்பும் இவர்களை தோற்கடிப்பது மிகவும் சவாலான விடயம்.