“சனி கொடுக்க யார் தடுப்பார்..” என்ற பழமொழியை கேட்டிருப்போம். இதற்கு சனியைப் போன்று கொடுப்பாரும் இல்லை கெடுப்பாறும் இல்லை என்பது தான் அர்த்தமாகும்.
இந்த பழமொழி சனீஸ்வர பகவானின் அருளை நமக்கு தெளிவாக்குகிறது. எமது ஜாதகத்தில் சனியின் ஆதிக்கம் இருந்தால் பலவிதமான பிரச்சினைகள் வரும் என்பது உண்மை தான். ஆனாலும் அவர் குறையாத அதிர்ஷ்டத்தை கொடுப்பார்.
அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு கிரகமாக சனி பகவான் பார்க்கப்படுகிறார். ஒருவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாற்றக்கூடிய அற்புதமான சக்திவாய்ந்த கிரகமாகும்.
அந்த வகையில், ஏழையாக இருப்பவர்கள் சனீஸ்வர பகவானின் அருளை பெற சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் குறைவில்லாத செல்வத்தை பெறுவார்கள்.
அப்படியாயின், சனி பகவானிடம் இருந்து யோகத்தை பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இந்த உலகில் பிறந்த அனைவரின் வாழ்க்கையிலும் ஜோதிடம் தாக்கம் செலுத்துகிறது. நவகிரகங்களின் ஆதிக்கத்தின்படி தான் நல்ல காரியங்கள் கணிக்கப்படுகின்றன. நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றார் போல் தான் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் என்றும் நம்பிக்கை உள்ளது.
அதிலும் குறிப்பாக சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சொல்வதற்கு ஒற்றை வார்த்தை போதாது. இப்படிப்பட்ட சனீஸ்வர பகவானின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவருடைய வாழ்க்கையில் இதுவரையில் பார்த்திடாத அளவுக்கு அதிர்ஷ்டத்தை பார்க்கலாம்.
சனி பகவானின் அருளை பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால் கஷ்டங்கள் மறைந்து யோகம் உண்டாகும். பரம ஏழையாக இருப்பவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தால் வேலையில் வருமானம் அதிகரிக்கும்.
அந்த வகையில், முடிந்தளவு பச்சரிசியையும் கருப்பு உளுந்தையும் சனிக்கிழமை அன்று வாங்கி யாராவது ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும். முழு மனதுடன் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் படிப்படியாக குறையும். சனீஸ்வர பகவானின் அருளை பெற்றுவிட்டால் நம்மிடம் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் முக்கியமாக பணம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து விடும். வரவு அதிகரிக்கும்.