பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய உடல் அமைப்புக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி இவர்களின் அவர்களின் புருவத்தின் வடிவமானது அவர்களுடைய குணம் மற்றும் வாழ்க்கையில் பெரமளவில் ஆதிக்கம் செலுத்தும்.
சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் புருவத்தின் வடிவத்துக்கும் ஆளுமைக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வில் போன்ற புருவங்கள்
வில் போன்ற அமைப்பில் நேர்த்தியான புருவங்களை கொண்டவர்கள் மிகவும் கோப குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் சிறிய விடயங்களுக்கும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மை கொண்டவர்கள்.
சுருங்கிய புருவங்கள்
புருவங்கள் கண்களுக்கு மிகவும் அருகில் சுருங்கிய தோற்றத்துடன் இருந்தால், அவர்கள் மனதில் வைராக்கியம் மற்றும் ஆத்திரத்தை கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்களாக இருப்பார்கள்.தக்க நேரம் பார்த்து பழிவாங்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இணைந்த புருவங்கள்
புருவங்கள் இரண்டும் இணைந்து காணப்படுபவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தனிமையில் வாடுபவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு எல்லா உறவுகளும் இருந்தாலும் இவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் தனிமையில் தான் இருக்கும்.
மூக்குடன் இணைந்த புருவங்கள்
புருவங்கள் சற்று மூக்கு பகுதியில் இருந்து ஆரம்பிக்கின்றது என்றால் அவர்கள், தங்களின் காரியத்தை சாதித்து கொள்ளுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் இலக்கை அடைவதில் மானம், அவமானம் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். குறி வைத்தால் இரை விழவேண்டும் என்பதில் உறுதியான இருப்பார்கள்.
வளைந்து நெளிந்த புருவங்கள்
புருவங்கள் சீராக இல்லாமல் வளைந்து நெளிந்து காணப்பட்டால், அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்கள் சுயநலம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் இருப்பார்கள்.