பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே  சிறிய விடயங்களுக்கும் எளிதில் மனமுடைந்து போகும் மென்மையான உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி மற்றவர்களால் எளிதில் காயப்படுத்தப்படும், மனதளவில் மிகவும் பலவீனமான ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

மனதளவில் பலவீனமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Mentally Weak Persons

மிதுனம் ராசியினர் புதன் கிரகத்தால் ஆளப்படுவதால் புத்திகூர்மை கொண்டவர்களாகவும், இரட்டைத்தன்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை பெரும்பாலும் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பப மாட்டார்கள். அதனால் சில நேரங்களில்  மன அமைதியின்றி மிகவும் பலவீனமாக உணர்வார்கள்.

இவர்களின் மனதில் தொடர்ந்து நடக்கும் உரையாடல்கள், நிலைத்தன்மையைக் அற்றதாக இருப்பதால், வாழ்க்கை முழுவதும் உணர்வுகளுடன் போராடும் நிலையிலேயே இருப்பார்கள்.

கன்னி

மனதளவில் பலவீனமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Mentally Weak Persons

கன்னி, ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் எல்லா விடயங்களிலும் முழுமையையும் நேர்த்தியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவே இவர்களின் பலத்துக்கும் பலவீனத்துக்கும் காரணமான இருக்கும்.

இந்த நுணுக்கமான இயல்பு சில நேரங்களில் அதிகமாக சிந்திக்கவும் சுயவிமர்சனம் செய்யவும் இவர்களை தூண்டுகின்றது.

இவர்கள் பெரும்பாலும் தங்களின் பகுப்பாய்வு மனதுக்கும் மிகவும் நிதானமான மனநிலைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்ச்சி செய்யும் போது மனதளவில் பலவீனமான இருப்பார்கள். இவர்களை மற்றவர்களால் வெகுவிரைவில் மனதளவில் தளர்த்திவிட முடியும்.

மீனம்

மனதளவில் பலவீனமான ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Mentally Weak Persons

மீன ராசியில் பிறந்தவர்கள் அவர்களின்  கனவு மற்றும் கற்பனை திறனுக்கு பெயர் பெற்றவர்களாகவும், இயல்பிலேயே இரக்க குணம் கொண்டவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.

இந்த குணங்கள் அவர்களின் படைப்பாற்றலுக்கு பங்களிப்பு செய்தாலும், தங்களை யதார்த்தத்தில் நிலைநிறுத்துவதில் சிரமப்படுவார்கள்.

மற்றவர்களை உணர்வு ரீதியாக ஒருபொதும் காயப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கும் இவர்களை மற்றவர்கள் எளிதில் காயப்படுத்திவிடுவார்கள். காரணம் இவர்கள் மனதளவில் மிகவும் மென்மையானவர்களாக இருப்பார்கள்.