கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முழு நாள் விவாதம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 21ஆம் திகதி  நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே ஒரு நாள் விவாதம் வழங்கப்பட்டுள்ளது.