பொதுவாகவே எந்த ஒரு உறவும் நீடிக்கவும், நிலைக்கவும் வேண்டும் என்றால், நம்பிக்கை மிகவும் அவசியமான ஒன்று.
அனைவருமே விசுவாசமான ஒருவரிடம் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.ஆனால் அப்படி ஒரு உறவு கிடைப்பது மிகவும் அரிது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிபப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் நேம்மையானவர்களாகவும், விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் பொறுப்புணர்ச்சியும் நேர்மையான நடத்தையும் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால், ஆளுப்படுபவர்கள் என்பதால், காதல் மற்றும் திருமண உறவின் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.காதல் உறவிலும் மிகவும் உண்மையாக நடந்துக்கொள்வார்கள்.
அவர்கள் திடீர் மாற்றங்களை விரும்புவதில்லை, மேலும் அவர்கள் உண்மையிலேயே நேசிக்கும் ஒருவரிடமிருந்து அரிதாகவே விலகிச் செல்கிறார்கள். இந்த ராசியினர் நம்பிக்கை துரோகிகளாக ஒரு போதும் மாறமாட்டார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் இதயத்திலிருந்து விசுவாசமானவர்களாக இருப்பார்கள். தன்னை நம்பியவர்களுக்காக இறுதி வரையில் நின்று போராடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் தங்களின் குடும்பத்தின் மீது அதீத அக்கறை மற்றும் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதன் காரணமாக உறவுகளை பாதுகாக்க தங்களின் உயிரையும் கொடுக்க தயாராக இருப்பார்கள்.
இந்த ராசியினர் ஒருவருக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டால், அதை இறுதிவரையில் காப்பாற்றுவார்கள். இந்த ராசியினரை நம்பி கடலிலும் தைரியமாக இறங்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நடைமுறைக்கு ஏற்றவர்கள் மற்றும் விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்கள் எந்த விடயத்திலும் முழுமையையும் நேர்த்தியையும் விரும்புவார்கள்.
இது அவர்கள் உறவுகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதையும் பிரதிபலிக்கிறது. அவர்கள் விரைவாக காதலிக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் காதலில் விழும்போது, அவர்கள் விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் நேர்மையையும் மரியாதையையும் மதிக்கிறார்கள், மேலும் விளையாட்டுகளையோ அல்லது தேவையற்ற நாடகங்களையோ அவர்கள் விரும்பவில்லை.இறுதிவரையில் நம்பிக்கை காப்பாற்றும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.