பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் காதல் மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருப்பது இயல்பு தான்.
காதலுக்கான ஏங்காதவர்கள் மிக மிக அரிது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் காதல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்ற போதிலும், பிரச்சினை வந்தால் உடனடியாக உறவில் இருந்து வெளியேறிவிம் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி பிரச்சினைகளுக்கு பயந்து துணையை விட்டு விலகுவதற்கு தயாராகிவிடும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் இயல்பாகவே உற்சாகத்தையும் பன்முகத்தன்மையையும் விரும்பும் குணம் கொண்டவர்களாகவும், இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
ஒரு உறவு வழக்கமானதாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாக சோர்வாகவோ உணரத் தொடங்கும் போது, அவர்கள் பெரும்பாலும் வெளியேறும் முடிவை எளிதில் எடுக்கின்றார்கள்.
அவர்களின் இரட்டை இயல்பு புதிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்துகிறது, எனவே இவர்கள் கடினமான காலங்களில் துணைக்கு ஆறுதலாக இருப்பதற்கு பதிலாக, வெளியேறி புதிய ஒன்றைத் தேடுவதில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வாழ்வில் எல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் சுதந்திரத்துக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கால் உறவில் கட்டுப்பாடுகளை உணரும் போது சற்றும் சிந்திக்காமல் அந்த உறவில் இருந்து வெளியேறுவதே முடிவு என நினைக்கின்றார்கள். இவர்பகள் உறவுகளை முறித்துக்கொள்ள ஒருபோதும் தயக்கம் காட்டுவது கிடையாது.
சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்களுக்கு காதல் மற்றும் திருமணத்தின் மீது அதிக ஆர்வம் இருக்கும் என்றாலும், காட்டுப்படுத்தாத வரையில் மட்டுமே துணையின் மீது காதலை பொழிவார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்பகள் பற்றற்ற தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். ஒரு உறவில் உணர்ச்சிகள் அதிகமாகவோ அல்லது குழப்பமாகவோ மாறும்போது, இவர்கள் அதிலிருந்ர் வெளியேறும் முடிவுக்கு சென்றுவிடுவார்கள்.
இவர்கள் எப்போதும் தர்க்கத்தை விரும்புகிறார்கள், இவர்களின் கருத்துக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் இவர்களின் கட்டுப்பாட்டில் அனைத்தும் நிகழ வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றார்கள்.
இவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் இடத்தில் இருந்து நிச்சயம் விலகிவிடுவார்கள். இவர்கள் காதல் உறவில் நினைக்க வேண்டும் என்றால், முழுமையான சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். இல்லாத போது உறவை முறித்துக்கொள்ள சிறிதும் தயக்கம் காட்ட மாட்டார்கள்.