சில நோய்களுக்காக மருந்து எடுத்துக்கொண்டவர்கள் காபி குடிக்க கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பலரும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சிலர் கிடைக்கின்ற நேரமெல்லாம் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்படி பலமுறை காபி குடிப்பது ஒரு விதமான போதை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எப்போதாவது காபியில் என்ன தீமை உருக்கிறது என்பதை யாராவது சிந்தித்துள்ளீர்களா? இது மிகவும் முக்கியம்.

இது ஒரு பக்கம் இருக்க சில நோய்கள் காரணமாக சிலர் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நபர்கள் ஒரு போதும் காபியை குடிக்க கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நோய்க்கு மருந்து எடுத்தால் தவறிக்கூட காபி குடிக்காதீங்க - எச்சரிக்கும் மருத்துவர்கள் | Taking Medicine This Disease Don T Drink Coffee

சளி மற்றும் காய்ச்சல் மருந்துகள் - காபி பல மக்களால் விரும்பப்படும் பானம். இந்த பானத்திலிருக்கும் காஃபின் நம் மைய நரம்பு மண்டலத்தை வேகப்படுத்தலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான சளி மற்றும் காய்ச்சல் மருந்துகளில் pseudoephedrine உள்ளது, இது ஒரு ஸ்டிமுலன்ட்டாகவும் செயல்படுகிறது.

இதன்போது காபியை எடுத்துக்கொண்டால் உடல் விளைவு அதிகரிக்க கூடும். இதனால் அமைதியின்மை, தலைவலி, இதயத் துடிப்பு வேகமாக இருப்பது மற்றும் தூக்கமின்மை ஆகிய விளைவுகள் ஏற்படும்.

இந்த நோய்க்கு மருந்து எடுத்தால் தவறிக்கூட காபி குடிக்காதீங்க - எச்சரிக்கும் மருத்துவர்கள் | Taking Medicine This Disease Don T Drink Coffee

 கார்டியோவாஸ்குலர் மருந்துகள் - கார்டியோவாஸ்குலர் நோய் என்பது இதயத்தையும், ரத்த நாளங்களையும் பாதிக்கும் நிலைமையாகும்.

இதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது நம் உடலில் அந்த மருந்துகள் சென்று ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை தற்காலிகமாக அதிகரிக்கும்.

காபினின் குணமானது அதே போல் தான் நரம்பு மண்டலத்தை வேகமாக்கும். எனவே கார்டியோவாஸ்குலர் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது காபி குடிக்க கூடாது.

இந்த நோய்க்கு மருந்து எடுத்தால் தவறிக்கூட காபி குடிக்காதீங்க - எச்சரிக்கும் மருத்துவர்கள் | Taking Medicine This Disease Don T Drink Coffee

தைராய்டு மருந்துகள் - அன்டர் ஆக்டிவ் தைராய்டுக்கான சிகிச்சைகள்  மிகவும் சென்சிட்டிவ் கொண்டதாக இருக்கும். இதனை ஆராய்ச்சியாளர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். 

ஆய்வுகளின்படி, levothyroxine எடுத்து கொள்வதற்கு சற்று முன்பு காஃபி குடிப்பது அதன் உறிஞ்சுதலை 50%-க்கும் அதிகமாகக் குறைக்கிறது.

சுருக்கமாக கூறினால் உங்கள் உடல் உறிஞ்சும் மருந்தின் அளவைக் குறைத்து, அதன் செயல்திறனை காஃபி குறைத்துவிடும். எனவே தைராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நபர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.