பொதுவாகவே ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயல்பான விடயம் தான். 

ஆனால் நாம் முகத்தை பராமரிப்பதில் காட்டும் ஆர்வத்தை கை, கால்களை கவனித்துக்கொள்வதில் காட்டுவது கிடையாது. இதனால் சிலரின் முகம் ஒரு நிறத்திலும் அவர்களின் கை, கால்கள் இன்னொரு நிறத்திலும் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

உங்க கை, கால்கள் மட்டும் கருப்பா இருக்கா? பளபளன்னு மாத்த இத பண்ணுங்க | Best Home Remedies To De Tan Feet And Hands

கருமையான கை, கால்கள் மற்றும் முழங்கால்கள், முழங்கைகள் என்பது ஹைப்பர் பிக்மென்டேஷனின் ஒரு வடிவம்.இது சருமத்தில் மெலனின் அதிகமாக இருக்கும் போது ஏற்படுகின்றது.

மெலனின் தான் சருமத்துக்கு நிறத்தை கொடுக்கும் நிறமி. இவை பாதிப்பில்லை என்றாலும் உடலின் மற்ற நிறங்களுக்கு இதை கொண்டு வர விரும்புவது இயல்பானது.

உங்க கை, கால்கள் மட்டும் கருப்பா இருக்கா? பளபளன்னு மாத்த இத பண்ணுங்க | Best Home Remedies To De Tan Feet And Hands

கருமையான  கை, கால்கள் முழங்கைகள், முழங்கால்களின்  நிறத்தையும் முகத்தின் நிறத்துக்கு கொண்டுவர வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மஞ்சள் - தயிர்

மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த இயற்கை மருந்து. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால், இது தொன்று தொட்டு சரும பராமரிப்பிலும் முக்கிய பொருளாக அறியப்படுகின்றது.

மஞ்சள் சீரற்ற சரும நிறத்தை மேம்படுத்தி சருமத்தை பிரகாசமாக்கும் தன்மை கொண்டது அதுபோல் தயிரில் அதிகளவில் புரோபயாடிக்குகள் இருப்பதால், இது  சரும நிறத்தை மேம்படுத்தி சருமத்தில் வறட்சியைக் குறைத்து நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.

உங்க கை, கால்கள் மட்டும் கருப்பா இருக்கா? பளபளன்னு மாத்த இத பண்ணுங்க | Best Home Remedies To De Tan Feet And Hands

ஒரு தேக்கரண்டி மஞ்சளை எடுத்து ஒரு கிண்ணம் தயிருடன் கலந்து, இந்த பேஸ்ட்டை கருமையாக இருக்கும் இடத்தில் மசாஜ் செய்யது  20-25 நிமிடங்கள் வரையில் அப்படியே  உலரவிட்டு, குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் உடனடியாகவே பொலிவடைவதை கண்கூடாக பார்க்கலாம்.

இந்த முறையை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும் கருமையாக கை, கால்கள், முட்டிபகுதி விரைவில் பளபளப்பாக மாறும்.

எலுமிச்சை சாறு - தேன்

கைகள் மற்றும் கால்களில் உள்ள கருமையை நீக்குவதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் பெரிதும் ஆற்றல் காட்டுகின்றது. பல அழகு சாதனப் பொருட்களில் எலுமிச்சை ஒரு பொதுவான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதற்கும் இதுவே முக்கிய காரணம்.

மேலும் எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவர். எலுமிச்சையில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. அதேபோல், இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் சருமத்தில் உள்ள அனைத்து வகையான அசுத்தங்களையும் அகற்ற பெரிதும் துணைப்புரிகின்றது.

உங்க கை, கால்கள் மட்டும் கருப்பா இருக்கா? பளபளன்னு மாத்த இத பண்ணுங்க | Best Home Remedies To De Tan Feet And Hands

சிட்ரிக் அமிலம் மற்றும் தேனில் அடங்கியுள்ள வைட்டமின் சி ஆகியவை சூரிய ஒளியால் சேதமடைந்த சருமத்திற்கு உடனடி பொலிவு கொடுக்கும்.

எலுமிச்சை சாற்றை தேனுடன் சேர்த்து நன்றாக கலந்து,  பாதிக்கப்பட்ட பகுதியில் மெதுவாக தடவி  15-20 நிமிடங்கள் நன்றாக காயவிட்டு கழுவினால் விரைவில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் மற்றும்  தயிரின் கலவையானது  டானை நீக்குவதில் பெரிதும் ஆற்றல் வாய்ந்தது. தோல் பராமரிப்பு விஷயத்தில் வெள்ளரிக்காய் பெயர் பெற்றது. பெரும்பாலான ஸ்பாக்கள் மற்றும் பார்லர்கள் கண்களில் ஏற்படும் கருவளையங்களைக் குறைக்க வெள்ளரிகளைப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது.

உங்க கை, கால்கள் மட்டும் கருப்பா இருக்கா? பளபளன்னு மாத்த இத பண்ணுங்க | Best Home Remedies To De Tan Feet And Hands

அதாவது நிறமியைக் குறைப்பதில் ஆற்றல் வாய்ந்த வெள்ளரிக்காயை தயிருடன் இணைக்கும்போது, ​​இந்தக் கலவை உங்கள் சருமத்தை டானிங்கிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் சருமத்தை நீறேற்றமாகவும் வைத்திருக்கின்றது. 

ஒரு கிண்ணத்தில்  வெள்ளரிக்காய் கூழ் மற்றும் சம அளவு தயிர் ஆகியவற்றைக் எடுத்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை உங்கள் கைகள் மற்றும் கால்கள் உட்பட கருமையாக இருக்கும் இடங்களில் தடவிவிட்டு, 15 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த தண்ணீரில்  நன்றாக கழுவினால், நிகழும் அற்புத மாற்றத்தை கண்கூடாக பார்க்கலாம்.