ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேடியாக தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மனதளவில் மிகவும் மென்மையானவர்களாக இருப்பார்கள். இவர்களை வார்த்தைகளால் பலவீனப்படுத்துவது யாருக்கும் எளிதானதாகவே இருக்கும்.
அப்படி பிறப்பிலேயே மனதளவில் பலவீனமானவர்களாகவும், மற்றவர்களால் நொடியில் காயப்படக்கூடியவர்களாகவும் அறியப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாகவும், எளிதில் மனமுடைந்து போகும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இதன் காரணமாக, மற்றவர்களின் கடுமையான அல்லது உணர்ச்சியற்ற வார்த்தைகளால் விரைவில் பாதிப்படையகூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் மற்றவர்களின் நடத்தைகளை கவனிக்கும் குணம் சற்று அதிகமாக இருக்கும். இந்த குணத்தால் அதிக துன்பத்தையும் மனஅழுத்தத்தையும் அனுபவிக்க நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இயல்பாகவே உணர்திறன் மிக்கவர்களாக அறியப்படுகிறார்கள். அவர்கள் சூழ்நிலைகளுக்கும், தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஆழமாக எதிர்வினையை காட்டுகின்றார்கள்.
இவர்கள் மற்றவர்களின் வார்த்தைகள் உட்பட, தங்கள் சூழலில் இருந்து எதிர்மறை சக்தியை உறிஞ்சும் போக்கைக் கொண்டுள்ளனர். அதனால் மற்றவர்களால் எளிதில் காயப்படுத்தப்படுகின்றார்கள்.
அவர்கள் அமைதியாகத் தோன்ற முயற்சித்தாலும், கூர்மையான வார்த்தைகள் அல்லது விமர்சனங்கள் அவர்களை நீண்ட காலத்திற்கு காயப்படுத்தி, தொந்தரவாக உணர வைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே தீவிரமானவர்களாகவும் ஆழமான உணர்வுகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் தாங்கள் அக்கறை கொண்டவர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு விசுவாசமாக இருப்பார்கள், ஆனால் துரோகம் அல்லது அவமானங்களுக்கு ஆளாக நேரிடும் போது அதிலிருந்து மீண்டு வரவே முடியாத நிலைக்கு அளாகின்றார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் ஒருவரின் வார்த்தைகளால் புண்பட்டதாக உணரும்போது, அவர்கள் அமைதியாகி, சமூக தொடர்புகளிலிருந்து விலகிச் செல்வார்கள்.இவர்களின் இந்த குணம் இவர்களை மனதளவில் எப்போதும் பலவீனமாக உணரவைக்கும்.