ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையி்ல் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் அப்பாவாக மாறியதன் பின்னர் மிகவும் பொறுப்புள்ளவர்களாகவும் தன் குழந்தையின் எதிர்கால மகிழ்ச்சிக்காக தங்களின் சந்தோஷங்களை தியாகம் செய்யும் உன்னத குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி மகளை தனது தாய்க்கும் மேலாக நினைத்து அவர்களை இளவரசியை போல் மரியாதையுடன் நடத்தும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசியில் பிறந்த ஆண்கள் தந்தையாக மாறும் போது தங்கள் மகள்கள் மீது அளவில்லாத அன்பு மற்றும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் மகள் தங்களின் தேவைகளை பற்றி கூறுவதற்கு முன்பே அவர்களின் தேவைகளைப் தானாக அறிந்து பூர்த்தி செய்யும் தலைசிறந்த தந்தையாக இருப்பார்கள்.
இவர்கள் மகளுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், மகளின் ஆசையை நிறைவேற்ற எந்த தியாகத்தையும் செய்ய தாயாராகவும் இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி அப்பாக்கள் தங்கள் மகள் மீது உறுதியான ஆதரவுக்கும், அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
தங்கள் மகள்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.
ரிஷப ராசி அப்பாக்கள் தங்கள் மகளுடன் வலுவான இணைப்பை கொண்ருப்பார்கள். இவர்கள் மனதளவில் மகள்களை இளவரசி போல் நினைப்பது மட்டுல்லாது அவர்ளின் நடத்தையிலும் காண்பிக்கின்றார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் அன்பு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் அப்பாக்களாக இருப்பதால், தங்கள் மகள்களுக்கு ஆடம்பர வாழ்வை கொடுக்க வேண்டும் என்பதில் நிச்சயம் உறுதியாக இருப்பார்கள்.
வாழ்வில் நீதி மற்றும் உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் தங்கள் மகளின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். மகளின் தேவையை நிறைவேற்ற தங்களின் ஆசைகளை தியாகம் செய்யக்கூடியவும் தயக்கங் மாட்டார்கள்.
இந்த ராசியினரை அப்பாவாக பெறும் பெண் குழந்தைகள் பெரும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மகளை ஒரு மகா ராணியயை போல் மதிப்பார்கள்.