தீபாவளி கொண்டாட்டத்திற்கு மக்கள் எல்லோரும் தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் கிரகப்பெயர்ச்சியும் தயாராகிக்கொண்டு இருக்கின்றது.
இது சாதாரண ஒரு பண்டிகை மட்டுமல்ல இதற்கு பின்னால் ஒரு புராண கதை உள்ளது. அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகையில் 100 ஆண்டுகளின் பின்னர் ஒரு அரிய குரு பெயர்ச்சி நடைபெறப்போகின்றது.
ஜோதிடத்தில் குருபகவான் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் மிகவும் புனிதமான கிரகமாக கருதப்படுகிறது.
தீபாவளியின் போது குருபகவான் சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. அது பற்றி பதிவில் பார்க்கலாம்.
கடகம் |
2025 தீபாவளி அன்று, குருபகவான் கடக ராசியில் உச்சம் பெறுகிறார். இதனால் ஹம்ச ராஜயோகம் உருவாக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு, இந்த சீரமைப்பு நம்பிக்கையையும் தலைமைத்துவ திறன்களையும் மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் லாபத்தை பற்றி கவலைப்படமல் புதிய தொழில் தொடங்கலாம். புத்திசாலித்தனம் பலமடங்கு உண்டாகும். உங்கள் ராசிக்கு எந்த துறையிலும் வெற்றி கிடைக்கும். |
துலாம் |
தீபாவளியன்று, துலாம் ராசியின் 10வது வீட்டில் நிலைபெறும் குருபகவான், கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த சக்திவாய்ந்த ராஜயோகம் தொழில் வளர்ச்சி, பதவி உயர்வுகள் மற்றும் சமூகத்தில் மரியாதை மற்றும் நற்பெயர் அதிகரிப்பதை உறுதியளிக்கிறது. இது வணிகத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும். பணத்திற்கான கஷ்டத்தை இல்லாமல் செய்யும். |
விருச்சிகம் |
விருச்சிக ராசியின் 9-வது வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவருகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் நிதிநிலையில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். உங்கள் அனைத்து துறையிலும் நீங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணத்திற்கான நெருக்கடி நீங்கும். புது வாழ்கையை தொடங்குவீர்கள். |