பொதுவாகவே நமது உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகவும் சீராக இருக்கும் போதே பூரண உடல் ஆரோக்கியம் என்று கருதமுடியும்.

இந்த வகையில் நமது பாதங்கள் நமது முழு உடலின் எடையையும் தாங்குகின்றன, மேலும் சிறிய அன்றாட வேலைகளுக்கும் கூட பாதங்களின் சீராக தொழிற்பாடு மிகவும் அவசியமானவை.எனவே தான் பாதங்கள் அழகாகவும் ஆரோக்கியமானவும் இருக்க வேண்டியது அவசியம்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

குறிப்பாக பெண்கள் தங்களின் ஆடைகளுக்கு ஏற்ற வகையில் விதவிதமாக காலணிகளை அணிய வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

ஆனால் பாதங்களின் அழகை கெடுக்கும் வகையில் ஏற்படும் பித்த வெடிப்புகள் பெரும்பாலான பெண்களின்ஆசைக்கும் ஒரு தடையாகவும் இருக்கும்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

பித்த வெடிப்புகளை மறைப்பதற்காக சில பெண்கள் எப்போதும் கால்களை மூடிய வகையில் தான் பாதணிகளை வாங்குவார்கள்.

அப்படி பெண்களின் பாத அழகை கெடுக்கும் பித்த வெடிப்புகளை போக்கி வெறும் 7 நாட்களிலேயே மென்மையாக அழகிய பாதங்களை பெற வீட்டிலேயே செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

வாழைப்பழம் மற்றும் அவகேடோ மாஸ்க்:  ஒரு பழுத்த வாழைப்பழம் மற்றும் அவகேடோவை ஒன்றாக மசித்து, அந்தக் கலவையை வெடிப்புக்கள் உள்ள பாதங்களில் நன்றாக தடவி விட்டு  15-20 நிமிடங்கள் அப்படியே நன்றாக உலரவிட வேண்டும். 

இந்த கலவையில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்  சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குவதற்கு பெரிதும் துணைப்புரியும். அந்த புட் மாஸ்கை தொடந்து ஒரு வாரத்துக்கு பயன்படுத்தினாலே போதும் பித்த வெடிப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள் : வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் நன்றாக குழைத்து அந்த கலவையை பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

தேங்காய் எண்ணெய் : இரவு படுக்கைக்கு செல்லும்  முன்னர் காலை நன்றாகத் தேய்த்து கழுவிவிட்டு சிறிது தேங்காய் எண்ணெய் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு தூங்குவதால் தூக்கத்தின் தரம் மேம்படுவதுடன் விரைவில் பித்த வெடிப்புகளும் மறைய ஆரம்பிக்கும். வெடிப்பு இல்லாதவர்களும் இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல்  தடுக்கலாம்.

பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்புக்கு குட்பை சொல்லணுமா? இதை மட்டும் செய்ங்க | Natural Remedies For Cracked Feet

விளக்கெண்ணெய் : குளித்து முடித்த பின்னர் பாதங்களை ஈரமில்லாதவாறு ஒரு பருத்தி  துணியால் துடைத்துவிட்டு, பின்பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம். மேலும் கடுமையான பித்த வெடிப்பால் பாதிக்கப்பட்ட பாதங்கள் கூட அதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது மென்மையாகவும் அழகாகவும் மாறும்.