ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களையும் அவர்கள் பிறந்த நேரம், ராசி, எண் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும்.
நம் வருங்காலத்தை மட்டுமல்லாமல் நமது உறக்கத்தையும் மாற்றயமைக்க முடியும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதாவது 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் கிரக நிலை மாற்றங்களின் போது உறக்க நிலையில் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படி நிம்மதியான தூக்கம் இல்லாத ராசியினர் சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் இழந்த உறக்கத்தை மீண்டும் வரவழைத்துக் கொள்ளலாம்.
அப்படியாயின், குறிப்பிட்ட 7 ராசிகளில் பிறந்தவர்கள் இழந்த போன நிம்மதியான உறக்கத்தை மீண்டும் பெற என்னென்ன பரிகாரங்களை செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

- மேஷம்- துளசி செடியை படுக்கையறையில் உள்ள ஜன்னலுக்கு வெளியில் வைக்க வேண்டும். சிறு தொட்டிச் செய்து பராமரிக்கும் பொழுது நீங்கள் இழந்த தூக்கம் கிடைக்கும்.
- ரிஷபம்- படுக்கையறையில் வலது புறம் - வெளிர் மஞ்சள் நிற விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அப்படி முடியாதவர்கள் கால் பாதங்களுக்கு அத்தியாவசிய எண்ணெய்யை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
- மிதுனம்- உலோகத்தை முடிந்தளவு உங்கள் படுக்கையறையில் தவிர்த்து விட வேண்டும். மரத்தால் ஆன உபகரணங்களை இரவில் வைத்திருங்கள், அப்போது உங்களுக்கு கெட்ட கனவுகள் இல்லாத நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

- கடகம்- இரவு நேரத்தை முடிந்தளவு ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும். இப்படி செய்தால் நீங்கள் இழந்த உறக்கம் கிடைக்கும். அறையின் மேல் வானம் போன்ற அமைப்பை வடிவமைத்துக் கொள்ளலாம்.
- சிம்மம்- படுக்கையறை சுவற்றுக்கு வெள்ளை நிற வண்ணம் பூசி வையுங்கள். முடிந்தவரை உங்கள் அறையில் அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ளவும். இது உங்களின் தூக்கத்தை மீட்டுத்தரும்.
- கன்னி- தெளிவான சிந்தனையாளர்களாக இருக்கும் இவர்களுக்கு நம்பிக்கை அதிகம் இரவு உறங்குவதற்கு முன்னர் 108 முனை ‘ஸ்ரீ ராமஜெயம்’ மந்திரம் புத்தகத்தில் எழுத வேண்டும். இது உங்கள் மனதில் தெளிவான சிந்தனையை தரும்.
- துலாம்- இயல்பாகவே தாராளமானவர்களாக இருக்கும் இவர்களின் அறை எப்போதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். போதுமான அளவு ஆரோக்கியமாக இருந்தால் உறக்கம் தானாகவே வரும்.
