நம்மிள் பலரும் காலையில் குளிர்ந்த நீரில் குளித்தால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் எனக் கூறுவார்கள்.
முடிந்தளவு வெந்நீரை தவிர்த்து குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களையும் பெற்றுக் கொள்ளலாம் உள்ளிட்ட பல கருத்துக்களை கேட்டிருப்போம்.
ஆனால் காலையில் குளிர்ந்த நீரில் பழக்கம் கொண்டவர்களுக்கு பக்கவாதம் வரும் என்ற தகவல் நம்மை அதிர்ச்சியாக்கியுள்ளது.
அந்த வகையில், காலையில் குளிர்ந்த நீரில் Shower Bath எடுப்பது பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் வைலரலாகி வருவதால் அதற்கு நிபுணர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “காலை நேரத்தில் குளிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என பலரும் நிறைக்கிறார்கள். ஆனால் குளிர்ந்த நீரால் காலையில் குளிக்கும் பொழுது பக்கவாதம் ஏற்படுவதற்கு 70% வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள் இதன் காரணமாக தான் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள்...” என பல வதந்திகள் நிறைந்த கட்டுக்கதைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் எதுவும் இல்லை.

மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுக்கையில், காலை நேரத்தில் ஷவரில் குளிப்பதால் 74% பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என கூறுவது முற்றிலும் தவறு. ஏனெனின் பக்கவாதம் மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் தடுப்பு அல்லது இரத்தக் கட்டிகளின் காரணமாகவே ஏற்படும் நோய் நிலைமையாகும்.
மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது தண்ணீரின் வெப்பநிலை காரணமாக பக்க வாதம் ஏற்படும் என்பது ஒரு பொய்யான தகவலாகும்...” என பேசியிருக்கிறார்.
