குழந்தைக்கு உணவுகளை கொடுத்து பழக்கிய உடனேயே சில பெற்றோர்கள் காபி கொடுத்தும் பழக்கிவிடுகின்றார்கள் ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் குழந்தைகளுக்கு காபி கொடுப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
பால் குழந்தைக்கு நல்லது என்பதனால், பால் குடிக்க மறுக்கும் குழந்தைகளுக்கு பால் சேர்த்த காபி குடித்து பழக்குவதுண்டு.

அதன் சுவைக்கு குழந்தைகளும் எளிதில் பழக்கப்பட்டுவிடுவார்கள். பெரியவர்களுக்கு நாள் முழுவதும் உற்சாகமாக தங்களின் வேலைகளை செய்ய காபி துணைப்புரியலாம்.
ஆனால் குழந்தைகளுக்கு காபி கொடுத்து பழக்குவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

"கஃபைன்" சேர்த்த உணவுகள் வளரும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பானது அல்ல.அவை உடல் ஆரோக்கியத்தில் பல தாக்கங்களை உண்டு செய்யலாம்.
குறிப்பாக காபியில் இருக்கும் "கஃபைன்" ஆனது இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் குழந்தைகளுக்கு படபடப்பு, ஆன்சைட்டி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

மேலும் காபியில் இருக்கும் பால், சர்க்கரை போன்ற பொருள்கள் அதிக கலோரிகள் கொண்டது. இது குழந்தைகளின் உடல் எடையை அதிகரித்து உடல் பருமன் பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில், சிறுவர்களுக்கு காபிக்கு மாற்றாக காபி சுவையில் கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான பானம் எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து இன்டா பிரபலமொருவர் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் பெரும் பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
